பொங்கல் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பொங்கல் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
Updated on
1 min read

பொங்கல் திருநாளை முன் னிட்டு தமிழ் மக்களுக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் கே.ரோசய்யா

பொங்கல் மற்றும் சங்கராந்தியை கொண்டாடும் மகிழ்ச்சியான இந்த வேளையில் நாடு முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது உளம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம் என்று உறுதியேற்போம். இந்த அறுவடைத் திருநாள், அனைத்துத் துறைகளிலும் வேகமான வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வளமையை வழங்கட்டும்.

முதல்வர் ஜெயலலிதா:

உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உழவுத் தொழிலைப் போற்றும் இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டிலும் வாசலிலும் வண்ணக் கோலங்களால் அலங்கரிப்பர். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புதுபானைக்கு மஞ்சள் தழையை காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவர்.

‘மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ வழங்கும் குணமுடை யோன் விவசாயி’ என்ற எம்.ஜி.ஆரின் வாக்குக்கிணங்க, பிறர் வாழ பாடுபடும் விவசாயப் பெருமக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பொங் கல் பண்டிகையைத் தமிழர்கள் இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்திட, சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியுள்ளது. இந்த இனிய வேளையில், தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in