

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன என மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் 2017-ம் ஆண்டு உள் ளாட்சித் தேர்தல் தொடர்பாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களு டனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டி யலை தயாரிப்பது குறித்தும், வாக்குச்சாவடி பட்டியல் விவரம், அதில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டியது வருமா என்பது குறித் தும், தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்படும் அலுவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதன் தேவை குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலைப் பிரித்து சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும்.
டெபாசிட் தொகை
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட வேட்புமனு தாக்கல் செய்தவர் களுக்கு மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 100 சதவீதம் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்பட்டுள் ளது. ஊராட்சிப் பகுதிகளில் டெபாசிட் தொகை குறைவு என்ப தால், அதை திரும்பப் பெறாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து, டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகி றது என்றார்.
மேலும், ஆய்வுக் கூட்டத்துக்கு முன் திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமியுடன் சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்) மோகன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, தேர்தல் தொடர்பான உபகரணங்கள் பாதுகாத்து வைக் கப்பட்டுள்ள அறையை மாநில தேர்தல் ஆணையர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.