

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங் களுக்கு ஜெர்மனியின் ஒத்துழைப்பு தொடர வேண்டும் என, தன்னை சந்தித்த ஜெர்மனி தூதர் மார்ட்டின் நேவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதா அழைப் பின் பேரில், தலைமைச் செயல கத்துக்கு நேற்று முன்தினம் 19-ம் தேதி, இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மார்டின் நே வந்தார், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அவர், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண் டாவது முறையாக தமிழக முதல் வராகியுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளத்தின் போது தமிழகம் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்ப அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மார்ட்டின் நே பாராட்டினார். மேலும், கடந்த ஜனவரி மாதம் சென்னை அருகில் அமைந்துள்ள போக்ஸ்வேகன் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியதை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜெர்மன் தூதர் முதல் வர் ஜெயலலிதாவிடம் கூறுகை யில், ‘‘ஜெர்மனியின் கேஎப்டபிள்யூ வங்கியின் உதவியுடன் தமிழகத்தில் மிகப்பெரிய முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில் செயல்படுத்தப்படும் நவீன நகர திட்டத்துக்கு உதவ ஜெர்மனி தயாராக உள்ளது. மேலும், ஜெர்மனி வர்த்தகர்கள் கோவையை சுற்றிப்பார்க்க உள்ளனர் கோவை மேயர் மற்றும் அரசு அதிகாரிக ளுடன் ஆலோசனை நடத்து கின்றனர். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், பசுமை எரி சக்தி வழித்தடம், மாநிலங்களுக்கு இடையிலான மின் பரிமாற்ற திட்டம், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டம், நகர்ப்புற போக்குவரத்து வசதிகள் போன்ற திட்டங்களிலும் தமிழகம் - ஜெர்மனி கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன’’ என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘‘தமிழக அரசு சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறது. மேலும், சமூக அமைதி நிலவுவதால் தமிழகம் முதலீட்டுக்கு சாதகமான பகுதியாக திகழ்கிறது. ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வாகன தயாரிப்பு நிறுவ னங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து, தமிழகத்தை வாகன தயா ரிப்பு முனையமாக மாற்ற தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு திட்டங் களுக்கு ஜெர்மன் நிதி நிறுவனத்தின் நிதியுதவிகளுக்கும், ஜெர்மனி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். அதே போல், ஜெர்மனியும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து உதவியும், ஒத்துழைப் பும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
சந்திப்பின் போது, ஜெர்மனி தூதருடன் அவரது மனைவி கேப்ரி யேல் நே, டெல்லியில் உள்ள ஜெர் மனி தூதரக அதிகாரி அனேட் பேசியர், செயல்பாட்டு தூதர் உல்ப் கேங் முல்லர் மற்றும் ஜெர்மனி தூதரக ஜெர்மன் மொழி நிபுணர் பிரியா ராமமூர்த்தி ஆகியோர் இருந்தனர். தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் பி.ராம மோக னராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் ஷிவ் தாஸ் மீனா இருந்தனர். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.