திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
Updated on
1 min read

திருச்சி மேலப்புதூரைச் சேர்ந்தவர் தயாள்குமார் மகன் சந்தோஷ் குமார்(28). இவர் இலங்கை செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார். அவரது உடைமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, ஒரு பெட்டியில் முறுக்கு மற்றும் இடியாப்பம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டைகளுக்குள், மாவு போன்ற பொருள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, அரிசி மாவு என்று சந்தோஷ்குமார் பதில் அளித்தார். ஆனால், சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், மாவு போன்ற பொரு ளைக் கைப்பற்றி சோதனையிட் டனர். அது, மெத்தாம்பெடாமைன் (Methamphetamine) என்ற வகையைச் சேர்ந்த போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 8.35 கிலோ எடையுள்ள போதைப் பொருளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், சந்தோஷ்குமாரைக் கைது செய்த னர். திருச்சி ஜுடீசியல் மாஜிஸ் திரேட் நீதிமன்றம் எண்.1-ல் ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ் குமார், பின்னர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in