Published : 04 Aug 2016 08:18 AM
Last Updated : 04 Aug 2016 08:18 AM

மின்கட்டண உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் ஒவ்வொரு முறையும் உயர்த்துகிறது - அமைச்சர் பி.தங்கமணி தகவல்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் உயர்த்துகிறது என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரி வித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று மின்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:

பி.ரங்கநாதன் (திமுக):

தமிழகத் தில் சிறு, குறு விவசாயிகளுக்கு கருணாநிதி 3-வது முறை யாக முதல்வராக இருந்த போதுதான் இலவச மின்சாரம் வழங்கினார்.

மின்துறை அமைச்சர் பி.தங்க மணி:

சிறு, குறு விவசாயிகளுக்கு எம்ஜிஆர்தான் இலவச மின்சாரம் வழங்கினார்.

திமுக துணைத் தலைவர் துரை முருகன்:

சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது கருணா நிதிதான்.

பி.ரங்கநாதன்:

மின் கட் டணம் தமிழகத்தில் உயர்த்தப் பட்டுள்ளது. தற்போது, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்து வோருக்கு ரூ.6.60 வசூலிக்கப்படு கிறது. இதை கணிசமாக குறைக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி:

கடந்த 2010-ம் ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது யார்? தற்போது, 1.91 கோடி நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 500 யூனிட்களுக்கு மேல் பயன் படுத்துவோருக்கு ரூ.350 வரை மிச்சமாகிறது.

100 யூனிட் யாருக்கு?

பி.ரங்கநாதன்:

100 யூனிட் இலவச மின்சாரம் எல்லோருக்கும் உண்டா?

அமைச்சர் தங்கமணி:

உங் களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் உண்டு.

பி.ரங்கநாதன்:

தெரு விளக்கு களுக்கு ரூ.6.35 வசூலிக்கப் படுகிறது. இதை குறைக்க வேண் டும். கடந்த 2010-ம் ஆண்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போது, தற்போதைய முதல்வர் அப்போது வெளியிட்ட அறிக்கை யில், வாடகை வீட்டில் இருப் பவர்கள் அதிக மின்கட்டணம் செலுத்துவதை குறிப்பிட்டு, மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத் தினார். ஆனால், நீங்கள் 1991 முதல் 95 வரை 4 முறையும், கடந்த முறை 3 முறையும் மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள். இதன் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி மின்வாரியத்துக்கு வருமானம் வந்துள்ளது.

அமைச்சர் பி.தங்கமணி:

நாங்கள் 2001-06-ல் 11 ஆயிரத்து 011 மெகாவாட் மின் நிறுவு திறனை வைத்திருந்தோம். கடன் ரூ.9 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. அதன் பின் வந்த நீங்கள் 206 மெகாவாட் மட்டுமே உயர்த்தினீர்கள். ஆனால், அதே நேரம் கடன் அளவை ரூ.45 ஆயிரம் கோடியாக உயர்த்தினீர்கள். 5 ஆண்டுகளில் மின் நிறுவு திறன் ஏன் குறைந்தது. மின்கட்டண உயர்வுக்கும் அர சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின்கட்டணத்தை உயர்த்துகிறது.

பி.ரங்கநாதன்:

கடந்த 5 ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 995 கோடிக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப் படுகிறது. இதைக் கொண்டு மின் மிகை மாநிலம் என கூறுகிறீர்களா?

அமைச்சர் தங்கமணி:

நாங்கள் வாங்கியது உங்கள் காலத்தில் போடப்பட்ட 15 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில்தான். தற்போது ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் ஒரு யூனிட் ரூ.5-க்கு கீழ்தான் வாங்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் நேற்று மின்துறை மானிய கோரிக்கை மீது இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x