

சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு புறப்பட் டது. நள்ளிரவு 12 மணியளவில் அரக்கோணம் அடுத்த புளிய மங்கலம் ரயில் நிலையத்துக்குள் வந்தது. அப்போது, ஏற்காடு விரைவு ரயிலின் இன்ஜின் மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள 3 பொதுப் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கியது. திடீரென பெட்டிகள் பயங்கர சத்தத்துடன் சாய்ந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
ரயில் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய தகவல் அரக் கோணம் ரயில் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சென்னை மற்றும் ஜோலார் பேட்டையில் இருந்து மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். ரயிலை மெதுவாக இயக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க் கப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையில், இன்ஜின் மற்றும் 3 பொதுப்பெட்டிகளை மீட்புக் குழுவினர் அங்கேயே விட்டுவிட்டனர். மற்றப் பெட்டி களை மாற்று இன்ஜின் உதவியு டன் பின்நோக்கி இழுத்துச் சென்ற னர். பின்னர், அதிகாலை 5 மணி அளவில் ஏற்காடு விரைவு ரயில் மாற்று இன்ஜின் மூலம் அங்கிருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டது.
அமைச்சர், நீதிபதி பயணம்
ஏற்காடு விரைவு ரயிலில் தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் ஆகியோர் பயணம் செய்துள் ளனர். மீட்புப் பணிகள் தாமதம் ஏற்படும் என்பதால், இருவரையும் கார் மூலம் போலீஸார் பாதுகாப்பாக சென் னைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் துண்டிப்பு
தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கிய இன்ஜின் மற்றும் 3 பெட்டிகளை மீட்க சென்னையில் இருந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. மீட்புப் பணி காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், சென்னை - அரக்கோணம் இடையிலான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, சென்னைக்கு நாள்தோறும் கல்லூரிக்குச் செல்லும் மாண வர்கள், வேலைக்குச் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ரயில்கள் தாமதம்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அரக்கோணம் ரயில் நிலையத்தின் 5-வது பிளாட்பாரத்தை ஒருவழிப் பாதையாக மாற்றி ரயில்கள் இயக்கப்பட்டன. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. சென் னைக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களும் அரக்கோணத்துக்கு அருகே உள்ள ரயில் நிலையங் களில் நிறுத்தப்பட்டன. ஒருவழிப் பாதை வழியாக ரயில்கள் இயக்கப் பட்டதால், 30 முதல் 60 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாக இயக் கப்பட்டன. ரயில்களை ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தியதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக, முதியவர்களும் நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.