குடிநீர் லாரிகளில் நீர் கசிந்து வீணாவது தடுப்பு: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

குடிநீர் லாரிகளில் நீர் கசிந்து வீணாவது தடுப்பு: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னையில் குடிநீர் லாரிகளில் இருந்து குடிநீர் சாலையில் கசிந்து வீணாவது, சென்னை குடிநீர் வாரிய நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரிய நீர் நிரப்பு நிலையங்களில் இருந்து, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு செல்லும் குடிநீர் லாரிகளில் இருந்து குடிநீர் கசிந்து சாலைகளில் வீணாவது கண்டறியப்பட்டது. அதைத் தடுக்க அந்தந்த பகுதி பொறியாளர்களுக்கு சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் வி.அருண் ராய் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, லாரிகளில் மேல் மூடி இல்லாமல் இரு்ந்தாலோ, மேல்மூடி இருந்து அதை சரியாக மூடாததன் காரணமாகவோ, லாரிகளில் உள்ள நீர் வெளியேறும் வால்வுகள் சரியாக மூடாததன் காரணமாகவோ குடிநீர் வெளியேற வாய்ப்புள்ளது.

அவ்வாறு இருப்பின் அது குறித்து அந்தந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பேசி, சரி செய்ய வேண்டும். அதன் பின்னரே, அந்த லாரியை குடிநீர் விநியோகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், குடிநீருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிய இன்றைய சூழலில் எக்காரணம் கொண்டும் குடிநீரை சாலைகளில் வீணாக்க கூடாது. இனி வரும் காலங்களில் அவ்வாறு லாரிகளில் விநியோகம் செய்வதற்காக செல்லும்போது குடிநீர் கசிவு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர் அல்லது ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவும் பகுதி பொறியாளர்களுக்கு, மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள 15 பொறியாளர்களும், தங்கள் பகுதியில் இயங்கும் நீர் நிரப்பு நிலையங்களில் இயங்கும் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து, விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர். அதனால் தற்போது சாலைகளில் குடிநீர் கசிந்து வீணாவது தடுக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in