சாமளாபுரத்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்: போலீஸார் பாதுகாப்புடன் இயங்கிய மதுக்கடை

சாமளாபுரத்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்: போலீஸார் பாதுகாப்புடன் இயங்கிய மதுக்கடை
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதில் மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: கடந்த ஏப்.11-ம் தேதி மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பெண்களைத் தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தாக்கிய போலீஸ் அதிகாரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இச்சம்பவத்தில் பொது மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற அறவழிப் போராட் டத்தை தொடங்கியுள்ளோம்.

போலீஸ் வழக்குப் பதிவு

இந்த உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 20 பேர் மீது, மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே திருப்பூர் ஆட்சியர் அளித்த உத்தரவுப்படி, சாமளாபுரம் பேரூராட்சியில் எங்கும் மதுக்கடை திறக்க அனுமதியளிக்கக் கூடாது. ஆனால் காளிபாளையத்தில் போலீ ஸார் பாதுகாப்புடன் கடை திறக் கப்பட்டு அன்றாடம் மதுவியாபாரம் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘பெண்ணை தாக்கிய ஏடிஎஸ் பிக்கு எப்படி பதவி உயர்வு வழங்கப்பட்டது’ என கேள்வி எழுப் பியதற்கு, மின்துறை அமைச்சர் தங்கமணி மழுப்பலாக பதில் அளித் துள்ளார். ஏடிஎஸ்பி மற்றும் தாக்கு தலில் ஈடுபட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். அத்துடன் காளிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையையும் உடனடியாக மூட வேண்டும் என்றனர்.

மூதாட்டி மயக்கம்

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்ட காளிபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (75) திடீரென மயங்கினார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப் பட்டார்.

சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில், போலீஸார் பாதுகாப்புடன் மது வியாபாரம் நடைபெற்று வருகிறது.

‘சாமளாபுரம் பேரூராட்சியில் 10 கி.மீ. சுற்றளவுக்கு எங்கும் மதுக் கடைகள் இல்லை. இந்நிலையில் இங்கு கடை இருப்பதால் மதுப் பழக்கத்துக்கு அடிமையான ஆண் கள் பலர் வண்டியில் வந்து சாலை யில் அமர்ந்தே மது அருந்துகின் றனர். இதனால் காளிபாளையம் செல்லும் சாலையை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. திருவிழாக் கூட்டம்போல் மதுக்கடையில் கூட்டம் கூடுகிறது’ என்று உண்ணாவிரதத்தில் பங் கேற்ற பெண் ஒருவர் கூறினார்.

காளிபாளையத்தில் போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் மதுக்கடை.

படங்கள்: இரா.கார்த்திகேயன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in