10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும்: ரிசர்வ் வங்கி விளக்கம்

10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும்: ரிசர்வ் வங்கி விளக்கம்
Updated on
1 min read

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். எனவே வதந்திகளை நம்ப வேண் டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

10 ரூபாய் நாணயங்கள் செல் லாது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இது தவறான செய்தி. புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும். இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாண யங்களைப் புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாண யங்கள் நீண்ட காலத்துக்கு புழக் கத்தில் இருக்கும்.

ஆகவே ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக் கத்தில் இருக்கும். இந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டன.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளைப் புறக்கணித்து 10 ரூபாய் நாண யங்களைத் தொடர்ந்து பயன் படுத்தலாம். இவை சட்டப்படி செல்லுபடியாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in