Published : 04 Jun 2017 12:14 PM
Last Updated : 04 Jun 2017 12:14 PM

குன்னூர் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பெண் யானை பலி

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளில், பெண் யானை ஒன்று பலியானது.

சமவெளிப் பகுதிகளில் இருந்து உணவு, தண்ணீர் தேடி குன்னூர், பர்லியாறு, குரும்பாடி, காட்டேரி, டைகர் ஹில், கேஎன்ஆர் ஆகிய பகுதிகளில் 3 பெரிய யானைகள், 2 குட்டி யானைகள் சாலையோரங்களில் நடமாடி வருகின்றன. இச்சாலை உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் முக்கியச் சாலையாக இருப்பதால், வாகனப் போக்கு வரத்து அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், யானைகள் நடமாட்டத்தால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், இப்பகுதியில் வனத் துறை ஊழியர் கள் தொடர்ந்து முகாமிட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இவ்வழியாக இரவு நேரத்தில் பயணிப்பவர்கள், கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டுமென என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குன்னூர் தாலுகா ஹில்குரோவை அடுத்த கோழிபாறை பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக, வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. வனச்சரகர் பெரியசாமி மற்றும் ஊழியர்கள் இறந்த யானையை ஆய்வு செய்தனர்.

வனச்சரகர் கூறும்போது, “கடந்த ஒரு மாதமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடி வந்த யானை கூட்டத்தில், ஒரு யானை பாறையில் இருந்து வழுக்கி விழுந்து இறந்துள்ளது. இறந்த யானைக்கு சுமார் 16 வயது இருக்கும். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே எரியூட்டப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x