Published : 11 Nov 2014 11:38 AM
Last Updated : 11 Nov 2014 11:38 AM

ஜெயலலிதா அனுமதித்தால் சந்தித்து ஆசி பெறுவேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற விரும்புகிறேன். அவர் அனு மதித்தால் நிச்சயம் சந்திப்பேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவனை மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித் தனர். பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி, மூத்த தமிழ்க் குடிமகன். சுய மரியாதை இயக்கத்தின் முதல் புதல்வர். எனவே, அவரை சந்தித்து ஆசிபெற்றேன். இதையடுத்து, இடதுசாரி இயக்க தலைவர்களை சந்திக்க உள்ளேன். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை யும் சந்தித்து ஆசி பெறுவேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னைவிட ஒரு வயது மூத்தவர். அவரை சந்தித்து ஆசி பெறவும் விரும்புகிறேன். அவர் அனுமதி தந்தால் நிச்சயம் சந்திப்பேன்.

11-ம் தேதி (இன்று) காலை பாளையங்கோட்டையிலும், மாலையில் கன்னியாகுமரியிலும் என மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்க உள்ளேன். 13-ம் தேதி நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழாவை, சென்னை காமராஜர் அரங்கத்தில் 14-ம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளோம். கட்சியை விட்டுப் போனவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்களுடைய திருச்சி மாநாடு நடக்குமா என்பதே சந்தேகமாகத் தான் உள்ளது. அப்படி நடந்தால் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பால் விலை உயர்வு தொடர் பாக ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டார். அதை வரவேற்கி றேன். ஆனால், அதற்காக ஒரு போராட்டத்தையும் அவர் நடத்தி யிருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி அறிக்கையோடு நிற்காமல் போராட் டத்தையும் நடத்தும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x