Last Updated : 14 Jan, 2014 12:00 AM

 

Published : 14 Jan 2014 12:00 AM
Last Updated : 14 Jan 2014 12:00 AM

மாட்டு வண்டிய பூட்டிக்கிட்டு...பொங்கல் நாளில் சவாரி செல்வதே தனி சந்தோஷம்தான்...

பண்டிகை.. கிராமங்களின் குதூகல திருவிழா. ஒவ்வொரு கிராமத்தி லும் அங்குள்ள கோயில்களில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு மாதத்தில் திருவிழா நடத்தப்படுவ துண்டு. ஆனால், ஒட்டு மொத்த கிராமங்களும் விழாக் கோலம் பூணுவது தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையின் போதுதான்.

பானையில் பொங்கல் பொங்கு வதுபோல நம் வாழ்விலும் வசந்தம் பொங்கி வழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்தப் பண்டிகையை எல்லோரும் கொண்டாடுகின்றனர். கரும்பு, மஞ்சள், புத்தாடை, வாசலில் வண்ணக் கோலங்கள், வீடு களில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள்.. இதெல்லாம் பொங்கல் பண்டிகையின் அடை யாளங்கள். இவை மட்டுமின்றி பல வீர விளையாட்டுகளும்கூட. குறிப்பாக ஜல்லிக்கட்டு.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது.

வேடிக்கையான மஞ்சுவிரட்டு

விளம்பர வெளிச்சத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளைப் பற்றி பலர் அறிந்திருப்பர். அதே நேரத்தில் கிராமங்களில் நடக்கும் பொங்கல் விளையாட்டுகள் பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.

வட மாவட்டங்களில் மஞ்சு விரட்டு என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடக்கும். காளைகளை இளம் காளையர்கள் அடக்குவது ஜல்லிக் கட்டு. ஆனால், சில ஊர்க ளில் நடக்கும் மஞ்சு விரட்டு வித்தியாசமாகவும் வேடிக்கையா கவும் இருக்கும்.

பாய்ந்துவரும் கட்டைப் புலி

சில ஊர்களில் கட்டையால் செய் யப்பட்ட புலியை சக்கர வண்டியில் பொருத்தியிருப்பார்கள். அதை கயிறு கட்டி இழுக்கும்போது புலி பாய்ந்து வருவதுபோல இருக்கும். ஊரில் உள்ள மைதானத்தில் காணும் பொங்கலன்று மாலை எல்லோரும் திரண்டிருப்பார்கள். கட்டைப் புலி பாய்வதற்கு தயாராக இருக்கும். மைதானத்துக்கு வெளியே மாடுகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாடாக அழைத்து வந்து புலிக்கு எதிர்திசையில் விரட்டி விடுவார்கள். தாரை, தப்பட்டை அடித்து மாட்டை உசுப்பேத்தி விரட்டுவார்கள். அது மிரண்டு ஓடும்போது எதிரே உள்ள கட்டைப் புலியை இழுப்பார்கள். புலியைப் பார்த்து மாடுகள் மேலும் மிரண்டு கூட்டத்தில் இருந்து விலகி ஓடும். பின்னர் அடுத்த மாட்டை கொண்டு வருவார்கள்.

சில பயந்தாங்கொள்ளி மாடு கள், புலியைக் கண்டு மிரண்டு ஓடும். வீரமான சில மாடுகள், கூரிய கொம்புகளால் கட்டைப் புலியை குத்தி பதம் பார்ப்பதும் உண்டு. கிராமத்து விடலைகள் சிலர், நாய்களையும் கன்றுகளையும்கூட இழுத்து வந்து புலி முன்பு அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். இதை நரி வேட்டை என்றும் சொல்வதுண்டு.

சில கிராமங்களில் மாட்டுப் பொங்கல் அன்று எல்லா மாடுகளை யும் அலங்கரித்து கோயிலுக்கு ஓட்டிச் செல்வார்கள். அந்த மாடு களின் பின்னால் சிலர், மஞ்சள் தண்ணீரை தெளித்தபடி ஓடி வரு வார்கள். ஊரில் உள்ள கோயில் முன்பு எல்லா மாடுகளும் வரிசை கட்டி நிற்கும். கோயிலில் பூஜை முடிந்து, மாடுகளுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அடுத்த நொடியில் மாட்டுப் பந்தயம் களைகட்டும்.

வண்டியில் ஏற போட்டி

பொங்கலுக்கு ஊருக்கு செல் பவர்கள் பஸ், ரயில்களில் இடம் கிடைக்காமல் முண்டியடிப்பார்கள் அல்லவா? அதுபோல அலங்கரிக் கப்பட்ட மாட்டு வண்டி, டயர் வண்டி, டிராக்டர்களில் சிறுவர் களும் பெரியவர்களும் முண்டி யடித்து ஏறுவார்கள். மாட்டு வண்டிகள் கிராமத்தை வலம் வரும் காட்சி, ரேக்ளா ரேஸ் போல இருக்கும். டிராக்டர், லாரிகள் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள நகரங்களுக்கோ, பெரிய கோயில்களுக்கோ சென்று திரும்புவார்கள்.

என்னதான் ஹைடெக் கார்கள், ஏசி பஸ்களில் பயணம் செய்தாலும் பொங்கல் தினத்தன்று மாட்டு வண்டிகளில் சவாரி செய்வது தனி சந்தோஷம். நாகரிக வளர்ச்சி யில் மறைந்துபோகாத பழைய கலாச்சாரம்தான். இருந்தாலும் இன்றைய, நாளைய தலைமுறை யினருக்கு இது ஒரு புது அனுபவமே.

என்னதான் ஹைடெக் கார்கள், ஏசி பஸ்களில் பயணம் செய்தாலும் பொங்கல் தினத்தன்று மாட்டு வண்டிகளில் சவாரி செய்வது தனி சந்தோஷம். நாகரிக வளர்ச்சியில் மறைந்துபோகாத பழைய கலாச்சாரம் இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x