Published : 08 Mar 2014 04:45 PM
Last Updated : 08 Mar 2014 04:45 PM

மலேசிய விமான விபத்தில் சிக்கிய சென்னை தொண்டு நிறுவன பெண் அதிகாரி- மீனவர் நலனுக்காக போராடியவர்

மலேசிய விமான விபத்தில் சென் னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன பெண் அதிகாரி சந்திரிகா சர்மாவும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்

மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சனிக்கிழமை அதி காலை சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம், தென் சீனக் கடலில் விழுந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானத்தில் இருந்த 239 பயணிகளும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 5 இந்தியர்களும் அடங்குவர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா (50) என்பவரும் சென்றுள்ளார். சென்னை வேளச்சேரியில் வசித்த சந்திரிகா ஷர்மா, இன்டர்நேஷனல் கலெக்டிவ் இன் சப்போர்ட் ஆப் பிஷ்ஸ் ஒர்க்கர்ஸ் (ஐசிஎஸ்எப்) என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றியவர். ஐ.நா. அமைப்பான உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மங்கோலியாவில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் நாடுகளுக்கான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது தான் விமான விபத்தில் சிக்கினார் என தெரியவந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்ததும் சந்திரிகாவின் குடும் பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மீனவர் நலனுக்காக போராடியவர்

சந்திரிகா பற்றி ஐசிஎஸ்எப் தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் தயங்கியபடி கூறியதாவது:

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரிகா, வேளச்சேரியில் நீண்டகாலமாக வசித்து வந்தார். அவருடைய கணவர் நரேந்திரன் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். மகள் மேக்னா டெல்லியில் பி.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். ஐசிஎஸ்எப் நிறுவனத்தில்19 ஆண்டுகளாக சந்திரிகா பணியாற்றினார். கடந்த 12 ஆண்டுகளாக நிர்வாக செயலாளராக இருந்தார். மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் எங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு இயக்கங் களில் சந்திரிகாவின் பங்களிப்பு பெரிது. சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்களை சாதாரண மீனவ மக்களிடம் கொண்டு சேர்த்தார். அனைவரிடமும் எளிமையாக பழகு வார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மீனவ சமுதாயத்துக்கு இழப்பு

தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய தலைவர் இளங்கோ கூறும்போது, ‘‘உலகில் நடக்கும் மீனவர்கள் தொடர் பான பிரச்சினைகள், திட்டங்களை எங்களிடம் சந்திரிகா ஷர்மா எளிமையான முறையில் எடுத்துரைப்பார். அவரது ஆலோ சனையும், செயல்பாடுகளும் எங் களுக்கு புத்துணர்வைத் தந்தன. அவர் ஆர்வமாக பணியாற்றுவார். அவர் இல்லாதது மீனவ சமுதாயத்துக்கு பேரிழப்பாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x