Published : 03 Jan 2016 10:59 AM
Last Updated : 03 Jan 2016 10:59 AM

சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு புதுச்சேரி மாநில நிர்வாகம் தயாராக உள்ளது: இந்திய துணை தேர்தல் ஆணையர் தகவல்

தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா புதுச்சேரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரியில் தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு தலைமையில் தேர் தலுக்கான பணிகளில் ஈடுபட் டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங் களுக்கு ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 4.85 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.41 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ள னர். 30 சட்டப்பேரவை தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 11-ம் தேதி வெளியிடப்படுகிறது. பட்டியல் வெளியிடப்பட்ட பின் பொதுமக்கள் பெயர்கள் சேர்த்தல், திருத்தம், நீக்கல் உள்ளிட்டவற்றை மேற் கொள்ளலாம். இதற்கான காலக் கெடுவையும் தேர்தல் துறை விரைவில் அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் நேற்று புதுச் சேரிக்கு வந்த இந்திய துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் அதிகாரி களுடன் முதல்கட்ட ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் தேதிகள், வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு, அரசு செயலர் முத்தம்மா, சிறப்புச் செயலர் சுந்தரவடிவேலு, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மணிகண்டன், வல்லவன், மற்றும் துணை தேர்தல் அலுவலர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்திய துணை தேர் தல் ஆணையர் சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் பிழையின்றி தயாரிக்க வேண்டும். வாக்களிக்க தகுதியான அனைவரது பெயரும் பட்டியலில் இடம்பெற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பட்டியலில் பெயர், சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பாக மக்கள் அளித்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு சேர்க்கப்பட்டு வருகிறது. ஏற் கெனவே புதுச்சேரியில் 100 சதவீதம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.

தமிழகம், புதுச்சேரி மாநில எல்லையோரம் உள்ளவர்களின் பெயர்கள் இரு மாநில வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்துவதற்கு புதுச்சேரி நிர்வாகம் தயாராக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x