

மெட்ரோ ரயில் சேவை கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:
நேரு பூங்காவில் இருந்து விமான நிலையத்துக்கு முதல் ரயில் சேவை காலை 5.54 மணிக்கும், கடைசி சேவை இரவு 9.54 மணிக்கும், விமான நிலையத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு முதல் சேவை காலை 6.05 மணிக்கும், கடைசி சேவை 9.50 மணிக்கும் இயக்கப்படும்.
விமான நிலையம் சின்னமலை இடையே முதல் ரயில் காலை 5.55 மணிக்கும் கடைசி ரயில் இரவு 10 மணிக்கும், சின்னமலை - விமான நிலையம் இடையே முதல் ரயில் 5.51 மணிக்கும், கடைசி ரயில் இரவு 9.51 மணிக்கும் இயக்கப்படும்.
செனாய் நகர் பரங்கிமலை இடையே முதல் ரயில் காலை 6.10 மணிக்கும் கடைசி ரயில் இரவு 9.50 மணிக்கும், பரங்கிமலை - செனாய் நகருக்கு முதல் ரயில் காலை 6.02 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.02 மணிக்கும் இயக் கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நேரு பூங்கா - விமான நிலையத்துக்கு முதல் ரயில் காலை 7.54 மணிக்கும், கடைசி ரயில் இரவு 9.54 மணிக்கும், விமான நிலையம் - நேரு பூங்காவுக்கு முதல் ரயில் காலை 8.05 மணிக்கும் கடைசி ரயில் 9.50 மணிக்கும் இயக்கப்படும்.
விமான நிலையம் - சின்னமலைக்கு முதல் ரயில் காலை 7.55, கடைசி ரயில் இரவு 10 மணிக்கும், சின்னமலை - விமான நிலையத்துக்கு முதல் ரயில் காலை 7.51, கடைசி ரயில் இரவு 9.51 மணிக்கும் இயக்கப்படும்.
செனாய் நகர் பரங்கிமலை இடையே முதல் ரயில் 8.10-க்கும் கடைசி ரயில் இரவு 9.50-க்கும், பரங்கிமலை செனாய் நகருக்கு முதல் ரயில் காலை 8.02-க்கும், கடைசி ரயில் இரவு 10.02-க்கும் இயக்கப்படும். 20 நிமிடங்கள் இடைவெளியில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.