புதிய அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதிய அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய அணை பாதுகாப்பு சட்ட வரைவு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தேசத்தின் சொத்தான அணைகளின் பாதுகாப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள் கிறேன். இவற்றை முறையாக பராமரிப்பதன் அவசியத்தை மாநில அரசுகள் அறிந்திருக் கின்றன.

அணை பாதுகாப்பு சட்ட மசோதா 2016 குறித்து மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்டு மத்திய நீர்வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த 2010-ல் இதேபோன்ற சட்ட மசோதா ஒன்றை, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அந்த மசோதாவில் உள்ள ஆட்சே பணைகள் குறித்து அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதியிருந் தேன். அந்த மசோதா காலாவதி யானதால், புதிய மசோதாவை மத்திய அரசு தற்போது கொண்டுவர முற்படுகிறது. இந்த புதிய மசோதாவை தயாரிக்கும்போது, பழைய அணை பாதுகாப்பு மசோதா குறித்து நான் ஏற்கெனவே தெரிவித்திருந்த ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாதது துரதிருஷ்ட வசமானது. தமிழக அரசுக்கு சொந்தமான முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், தூனக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய அணை களை தமிழக அரசு பராமரித்து வருகிறது. அது தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் அவை அண்டை மாநில பரப்பில் அமைந்துள்ளது. அந்தந்த மாநிலத்திலுள்ள அணைகளை அந்தந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்பே பராமரிக்க வேண்டும் என்று புதிய சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய அணை பாதுகாப்பு மசோதா தமிழக அரசுக்கு எதிரானது.

எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, புதிய சட்ட மசோதா குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in