

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா காய்கறி அங்காடி போன்ற அனைத்து முன்னோடி திட்டங்களும் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா காய்கறி அங்காடி போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படும்" என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பின்னர், பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசின் நலத்திட்டங்களுக்கு 'அம்மா' என்று பெயர் சூட்டக்கூடாது என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் திட்டங்கள் தொடரும் என ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார்.