

இந்தியாவில் 2020-ம் ஆண்டுக்குள் 100 மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதியை பொதுமக்கள் பெறு வதற்கேற்ப நடவடிக்கை எடுக் கப்படும் என்று வட்டிக்குட்டி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா வில் செயல்பட்டு வரும் ‘வட்டிக் குட்டி டெக்னாலஜீஸ்’ நிறுவனம் ரோபோடிக் அறுவை சிகிச்சையை இந்தியா உட்பட உலகம் முழுவ தும் பரப்பி வருகிறது. இந்தியா வில் ரோபோடிக் அறுவை சிகிச் சையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக வட்டிக்குட்டி டெக் னாலஜீஸ் நிறுவனரும், வட்டிக் குட்டி அறக்கட்டளை அறங்காவ லரும், அமெரிக்க வாழ் இந்தியரு மான ராஜ் வட்டிக்குட்டி சென்னை யில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை அப்போலோ மருத் துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை துறை இயக்கு நர் அனந்தகிருஷ்ணன், பெருங் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கட் முனிகிருஷ்ணன், கொச்சி அமிர்தா மருத்துவமனை மகப் பேறு அறுவை சிகிச்சை நிபுணர் அனுபமா ராஜன்பாபு ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். செய்தி யாளர்களிடம் அவர்கள் கூறிய தாவது:
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ இயந்திரங்கள் 1,800 உள்ளன. இந்தியாவில் 30 ரோபோ இயந்தி ரங்கள் மட்டுமே உள்ளன. தமி ழகத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மட்டும் ஒரே ஒரு ரோபோ இயந்திரம் உள்ளது. ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதியானது, துல்லியமானது. வலி இருக்காது. ரத்த இழப்பு குறைவு.
ஆரம்பத்தில் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் களை குணப்படுத்தவே ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அனைத்து வகை அறுவை சிகிச்சைகளும் ரோபோ மூலம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாக்கு, வாய் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகம். இந்த புற்றுநோய்களுக்கு ரோபோ மூலம் குறைந்த வலியுடன் தழும்பு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
இந்தியாவில் மக்களிடம் ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இன்னும் அவ்வளவாக ஏற்படவில்லை. இந்தியாவில் 2020-ம் ஆண்டுக்குள் 25 நகரங்களில் உள்ள 100 மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி இருக் கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு புற்றுநோய் மையங்கள், பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகளிலும் மக்கள் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதியை பெற தேவையான உதவி செய்யப்படும். மேலும், இந்தியாவில் பயிற்சி பெற்ற ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தற்போது 190 பேர் மட்டுமே உள்ளனர். இதை 2020-ம் ஆண்டுக்குள் 500 ஆக உயர்த்தவும் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். வட்டிக்குட்டி டெக்னாலஜீஸ் தலைமை செயல் அதிகாரி கோபால் சக்ரவர்த்தி உடன் இருந்தார்.