

வருங்கால தேர்தல் கூட்டணிக் காகவே திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து சுயநலத்தோடு முழுஅடைப்பு போராட்டம் நடத்தியுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அப்பட்டமான சுயநலத்துக் காக திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளன. பல இடங்களில் கடைகளை திறக்கக் கூடாது என வணிகர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். மக்க ளின் மனப்பூர்வ ஆதரவு இல்லா ததால் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
கட்டாயமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் திருப்பூரில் மட்டும் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக் காக முழுஅடைப்பு என்கிறார் ஸ்டாலின். கர்நாடகாவில் இவர்களது கூட்டணிக் கட்சி யான காங்கிரஸ்தானே ஆட்சி யில் உள்ளது. காவிரி நீரை திறந்து விடுமாறு அவர்களை ஏன் இவர் கேட்கவில்லை?
வஞ்சித்த திமுக
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது விவ சாயிகளை வஞ்சித்த திமுக, இப்போது போராட்டம் நடத்து வது மக்களை ஏமாற்றும் செயல். வருங்கால கூட்டணிக் காக திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சுயநலத்தோடு முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளன. இப்போராட்டத்தால் விவசாயி களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இந்த முழுஅடைப்பு வெற்றி போராட்டம் அல்ல. இதை சட்டம் - ஒழுங்கு பிரச் சினையாக மாற்ற நினைத்த எதிர்க்கட்சிகளின் சதித் திட்டத்தை முறியடித்த காவல் துறைக்கு பாராட்டுகள்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.