கமுதி அதானி மின்திட்ட சோலார் தகடுகளை கழுவ குடிநீரை பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு: அதானி நிர்வாகம் மறுப்பு

கமுதி அதானி மின்திட்ட சோலார் தகடுகளை கழுவ குடிநீரை பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு: அதானி நிர்வாகம் மறுப்பு
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அதானி மின்திட்டத்தில் சூரிய ஒளி (சோலார்) தகடுகளை கழுவ தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அதானி நிர்வாகம் மறுத்துள்ளது.

செங்கப்படை கிராமத்தில் கவுதம் அதானியின், அதானி குழுமம் ‘அதானி கிரீன் எனர்ஜி தமிழ்நாடு’ என்ற பெரிய சூரிய சக்தி மின் திட்டத்தை அமைத்துள்ளது. ரூ. 4500 கோடி செலவில் 3000 ஏக்கரில் 25 லட்சம் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 25 லட்சம் சூரிய ஒளி தகடுகள் (சோலார் பேனல்கள்) இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டு மார்ச், ஏப்ரலில் அதிகபட்சமாக 640 மெகாவாட் மின் உற்பத்தியை தொட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை சூரிய ஒளி மின் தகடுகளை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அதற்காக நல்ல நீர் பயன்படுத்தப்படுகிறது. மின்திட்டம் அமைந்த பகுதியில் உப்பு நீராக உள்ளதால், கமுதி அருகே கோட்டைமேடு, பசும்பொன் கிராமங்களிலிருந்து தனியாரிடம் இருந்து டிராக்டர்கள் மூலம் தினமும் 50 டிராக்டர்கள் வரை குடிநீருக்கு பயன்படும் நீரை எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கமுதி பகுதியில் கடும் வறட்சியால், மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கிணறு, ஆழ்துளை கிணறுகள் வறண்டன. ஆழ்துளை கிணறுகள் 600 அடிவரை ஆழப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா செயலாளர் முத்து விஜயன் கூறியது: கமுதி ஒன்றியத்தின் 53 ஊராட்சிகள் மற்றும் சாயல்குடி, கடலாடி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக, கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனியார் கிணறுகளில் இருந்து வருகிறது. இங்கிருந்து டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துச் செல்கின்றனர். குடிநீருக்கு பயன்படும் இந்த நீரை தினமும் 30 முதல் 50 டிராக்டர்கள் மூலம் 2லட்சம் லிட்டர் தண்ணீரை, சூரிய ஒளி தகடுகளை கழுவ அதானி குழுமம் எடுத்துச் செல்கிறது.

இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். குடிநீருக்காக யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொழிற்சாலைக்கு பயன்படுத்து வதால், இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும். எனவே தொழிற் சாலைக்கு தண்ணீர் எடுத் துச் செல்வதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

கமுதி அதானி கிரீன் எனர்ஜி மின்திட்ட தலைமை அதிகாரி சந்தோஷ்குமார் மல் கூறும்போது, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைவிட இங்கு குறைவான தூசியே சூரிய ஒளி தகடுகளில் படிகிறது. அதனால் இங்கு 45 நாட்களுக்கு ஒரு முறையே கழுவப்படுகிறது. அப்படி கழுவினால் 25 லட்சம் தகடுகளுக்கும் 50 லட்சம் லிட்டர் 45 நாளுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது.

இதில் எங்கள் திட்டத்தில் 80 கிலோ லிட்டர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது. இந்த நீரை பயன்படுத்துகிறோம். இதுபோக தேவைக்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் 10 பேரிடம் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வாங்கி சூரிய ஒளி தகடுகளை கழுவுகிறோம. மழை பெய்தால் அந்த தண்ணீர் பயன்படுத்துவதும் நிறுத்தப்படும். சிலர் தவறான தகவல்கள் தெரிவித்து, குடிநீரை வீணடிப்பதாக தெரிவிக்கின்றனர் என்றார்.

ராமநாதபுரம் ஆட்சியர் ச.நடராஜன் கூறியது: தனியார் தண்ணீரை அதானி கிரீன் எனர்ஜி பயன்படுத்துவதாக எழுந்த குற்றச் சாட்டை தொடர்ந்து, ஊராட்சிகள் உதவி இயக்குநர் மூலம் விசா ரணை செய்ய அறிவுறுத்தி னேன். விசாரணையில் தற்போது தனி யார் நீரை சூரிய ஒளி தகடுகள் கழுவ பயன்படுத்துவதில்லை என அந் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in