Published : 20 Sep 2016 08:45 AM
Last Updated : 20 Sep 2016 08:45 AM

அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி 3-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதம்: முதியவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி, பழவேற்காடு- கரிமணல் மீனவர்கள் 3-வது நாளாக நேற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது முதியவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற் காடு ஏரியை ஒட்டி அமைக்கப் பட்டுள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்காக அப்பகுதியில் இருந்த மீனவ கிராம மக்கள் 1984-ம் ஆண்டு வெளியேற்றப் பட்டனர். அவர்களில், கரி மணலைச் சேர்ந்த 24 குடும்பங் களுக்கு 1986-ல் லைட்ஹவுஸ் குப்பம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிலம் ஒதுக்கி வீட்டுமனை பட்டாவை வழங்கியது அரசு.

அந்நிலம் தாழ்வான பகுதியாக இருந்ததால், அருகே உள்ள மேடான பகுதியான அரசு புறம் போக்கு நிலத்தில் கரிமணல் மீனவ மக்கள் வசிக்கத் தொடங்கினர். கடந்த 30 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 24 குடும்பங்கள் இன்று, 125 குடும்பங்களாகிவிட்டன. அவர்கள் தற்போது வசிக்கும் நிலத்துக்கு பட்டா இல்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே அரசு வழங்கிய நிலம், 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் மீண்டும் அரசு நிலமாகிவிட்டது.

இந்நிலையில், அரசு ஏற் கெனவே ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதிக்க கோரி கரிமணல் மக்கள் கடந்த மாதம் தொடர் உண் ணாவிரதத்தை தொடங்கினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள பகுதி யிலேயே குடியேறுவதாக கூறி ஆந்திர பகுதிக்கு செல்லும் போராட்டமும் நடத்தினர்.

தொடர்ச்சியான போராட்டங் களுக்கு பிறகும் தங்களுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், கடந்த 17-ம் தேதி முதல் மீண்டும் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.

திருவள்ளூர் எம்.பி., வேணு கோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. மீனவப் பெண்களில் 5 பேர் நேற்று முன்தினம் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்த நிலையிலும் மீனவ மக்கள் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.

3-வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதில் பங்கேற்றுள்ளவர்களில் கணிசமானோர் முதியவர்கள் என் பதால், அவர்கள் உடல் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில், சரோஜா(50), கோவிந் தம்மாள்(40), கிருஷ்ணவேணி(45), பூபதி(52) மற்றும் செந்தில்(35) ஆகியோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். கரிமணல் மீனவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x