சென்னை வார்டுகளில் போட்டியிட காங்கிரஸார் விருப்ப மனு: மாவட்ட தலைவர்களிடம் அளித்தனர்

சென்னை வார்டுகளில் போட்டியிட காங்கிரஸார் விருப்ப மனு: மாவட்ட தலைவர்களிடம் அளித்தனர்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி யிடுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களி டம் இருந்து விருப்ப மனுக் கள் பெறப்படுகின்றன. இதற்காக கட்சி ரீதியான 61 மாவட்டங் களுக்கும் மாவட்டத் தலைவர் கள் தலைமையில் தலா 4 பேர் கொண்ட குழுக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர் அமைத்துள்ளார்.

தென்சென்னை மாவட்டத்தில் உள்ள 42 மாநகராட்சி வார்டு களுக்கு அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜ னிடம் நூற்றுக்கணக்கானோர் நேற்று விருப்ப மனு அளித்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 32 வார்டுகளுக்கு புரசை வாக்கத்தில் உள்ள அலுவலகத் தில் மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யத்திடமும் வட சென்னை மாவட்டத்தில் உள்ள 33 வார்டுகளுக்கு ராஜாஜி சாலை யில் உள்ள அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளர் ராயபுரம் மனோவிடமும் ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.

இன்று மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். இந்த விருப்ப மனுக்களை 4 பேர் குழு பரிசீலனை செய்து மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரிடம் இறு திப் பட்டியலை அளிக்க உள்ளனர். அதில், காங்கிரஸுக்கு ஒதுக்கப் படும் இடங்களுக்கு வேட்பாளர் கள் அறிவிக்கப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in