நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட் டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தொடர்பாக 22 தனியார் நிறுவனங் களுடன் மத்திய அரசு கடந்த மார்ச் 27-ம் தேதி ஒப்பந்தம் போட்டுள்ளது. கடந்த 2009-ல் ஓஎன்ஜிசி நிறுவ னம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் பரிசோதனை நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது நெடுவாசலில் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
அமெரிக்காவின் பென்சில் வேனியா மாநிலத்தில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தியதால் அங்கு நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர் மாசடைந்ததற்கான ஆதாரம் உள் ளது. இத்திட்டத்தை செயல்படுத்தி னால் விவசாயம் பாதிக்கப்படும். நிலநடுக்க அபாயமும் உள்ளது.
தவிர, எந்த ஒரு திட்டத்துக்கும் பொது டெண்டர் அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்துக்கு விவசாயி களுடன் கலந்துபேசாமல் கர்நாடக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சித்தேஷ்வராவின் மனைவிக்கு சொந்தமான ஜெம் லேபரட்டரி நிறுவனத்துக்கு இ-டெண் டர் முறையில் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு சட்டவிரோதமாக வழங்கி யுள்ளது. சித்தேஷ்வராவின் சகோதரர் லிங்கராஜூ சட்டவிரோதமாக இரும்பு தாதுக் களை எடுத்த வழக்கில் சிபிஐயால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர். இந்த ஒப்பந்தமே பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு, வழக்கு விசார ணையை ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.