Published : 29 Mar 2014 08:38 am

Updated : 07 Jun 2017 11:57 am

 

Published : 29 Mar 2014 08:38 AM
Last Updated : 07 Jun 2017 11:57 AM

2 ஆண்டுகளாகியும் விலகாத மர்மங்கள்: திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை விவகாரம்...

2

தமிழக காவல்துறைக்கு சவாலாக அமைந்த ராமஜெயம் கொலை விவகாரம் நடந்து முடிந்து இன்றுடன் 2 ஆண்டுகளாகிறது.

துப்பு துலக்குவதில் இந்தியாவில் சிறந்த மாநில காவல்துறைகளில் ஒன்றான தமிழக காவல்துறை இதுவரை இந்த வழக்கில் ஒரு சிறு துரும்பு கூட துப்புக் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறது.


இந்தத் தேர்தலில் திருச்சியில் பிரச்சாரம் செய்கிற விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் சட் டம் - ஒழுங்கு நிலைமை மோசம் என்பதற்கு இந்த வழக்கை உதாரணம் காட்டி பேசி வருகின்றனர்.

நேருவின் வலதுகரம்

மத்திய மண்டல திமுக.வின் மிக வலிமையான தூணாக திகழும் திருச்சி மாவட்ட திமுக செயலர் நேருவுக்கு வலதுகரமாகவும், அவரது அரசியல் ஏற்றத்துக்கும், அந்த குடும்பத்தினரின் பொருளா தார எழுச்சிக்கும் மூளையாக திகழ்ந்தவர் அவரது தம்பி ராம ஜெயம். நடைப்பயிற்சி சென்ற இவரை 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அடையாளம் காணப்பட முடியாத ஒரு கும்பல் கடத்திச் சென்று சில மணி நேரம் கொடூர சித்திரவதை செய்து பின்னர் கொலை செய்துள்ளது. தொடக்கத் தில் இந்த வழக்கை திருச்சி மாநகர போலீஸும் பின்னர் சிபிசிஐடி போலீ ஸும் துப்புத்துலக்க தொடங்கின.

1400 பேரிடம் விசாரணை

இதுவரை 1400 பேரை (இதில் ரவுடி கள் 60 பேரும் அடங்குவர்) சந்தே கத்தின் பேரில் விசாரித்துள்ள சிபிசிஐடி அந்த வழக்கில் அணு அளவுக்குக்கூட முன்னேற முடியா மல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 3000 செல்போன் தொடர்புகள் விசாரிக்கப்பட்டுள்ளன. விலாசம், புகைப்பட ஆதாரம் இல்லாமல் வாங்கப்பட்ட 7 சிம் கார்டுகள் மூலம் செல்பேசி தொடர்புகள் கொலை நிகழ்ந்த அன்று திருச்சி பகுதியில் புழக்கத்திலிருந்துள்ளன. பிறகு அவை புழக்கத்திலேயே இல்லை. இந்த 7 செல்பேசி இணைப்பு குறித்த தகவலை திரட்ட முடியாததால் காவல்துறையினரின் திணறல் நீடிக்கிறது.

ராமஜெயம் கொலையாவதற்கு சில மாதங்கள் முன்பே மது அருந்துவதை விட்டுவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் ராம ஜெயம் உடலை பிரேத பரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் சிறிதளவு மது இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.அதேபோல் ராமஜெயம் கொலை நிகழ்ந்த அன்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றதாக வீட்டிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராமஜெயம் கொலை நிகழ்ந்து 12 மணி நேரமிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சிக்கு புறப்பட்டவர் 8.30 மணியளவில் கல்லணை சாலையில் சடலமாகக் கிடந்தார்.

மதியம் 1 மணிக்கு பிரேத பரிசோதனை நடந்தது. ஆனால் மரணம் நிகழ்ந்து 12 மணி நேரமிருக்கலாம் என வெளியான பிரேத பரிசோ தனை அறிக்கை காவல்துறையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ராமஜெயம் கொலை விவகாரத்தை விசாரணை செய்ய ஆரம்பித்த போது அவருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிரிகள் இருப்பது தெரியவந்தது.

அவரை கொலை செய்யக்கூடிய அளவுக்கு பயங்கரமான எதிரிகள் யாரென்று அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் தெரிந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ அவர்கள் வெளிப்படையாக எதிரிகளைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர். அவர்களிடமிருந்து தேவையான தகவல் கிடைத்திருந்தால் இந்த வழக்கு எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்றார்.

`குற்றவாளிகளைப் பிடிப்போம்'

இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி டி.எஸ்.பி. மலைச்சாமி ’தி இந்து’விடம் கூறும்போது, ’ஆரம்பத்தில் 14 தனிப்படைகள் அமைத்து இந்த வழக்கை துப்புத் துலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிபிசிஐடி போலீஸார், அதே உற் சாகத்துடன் இன்னமும் நம்பிக்கை யுடன் இந்த வழக்கை துப்புதுலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் எப் படியும் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம். ஆனால் அது எப்போது வேண்டுமானலும் நிகழ லாம். வேலூரில் 8 ஆண்டுகள் கழித்து நகைக்காக கொலை செய்யப்பட்ட சுசீலா என்கிற பெண் ணின் கொலை வழக்கில் துப்பு துலக்கினோம். அதுபோல் ராம ஜெயம் கொலை வழக்கிலும் நீடிக்கும் மர்மங்கள் அனைத்துக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்றார்.

நீதிமன்றத்தை நேரு நாடாதது ஏன்?

தன் மீது தொடுக்கப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக நேரு உச்ச நீதின்றம் வரை சென்றார். ஆனால் தனது பாசத்துக்குரிய தம்பியின் கொலையை 2 ஆண்டுகளாகியும் துப்புதுலக்காத தமிழகக் காவல்துறையிடமிருந்து இந்த வழக்கை வேறு உயர் விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தை நேரு அணுகாதது ஏன் எனக் கேள்வியெழுப்புகின்றனர் அவரது அரசியல் எதிரிகள்.


ராம ஜெயம் கொலைகொலை வழக்கிகே.என்.நேரு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x