மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: அதிமுக மாணவர் அணி வலியுறுத்தல்

மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: அதிமுக மாணவர் அணி வலியுறுத்தல்
Updated on
1 min read

மருத்துவப் படிப்புக்கான நுழை வுத்தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை அதிமுக மாணவர் அணி வலியுறுத்தியுள்ளது.

அதிமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை யில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மையில் நடந்த இக்கூட்டத்தில், அவைத் தலைவர் மதுசூதனன், தமிழ் மகன் உசேன், அமைப்புச் செய லாளர்கள் தளவாய் சுந்தரம், பி.வளர்மதி, ஊடக பிரிவு தொடர்பாளர் சமரசம், சோலை இரா.கண்ணன், எம்.டி.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 32 ஆண்டுக ளுக்குப் பிறகு மீண்டும் இரண் டாவது முறையாக ஆட்சியை பிடித்ததற்கும், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை நடைமுறைப் படுத்தியதற்கும் முதல்வர் ஜெய லலிதாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படு வதைத் தடுக்க உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். மருத் துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், இந்திய அரசின் ஆட்சி மொழியாகவும் தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி பள்ளி, கல்லூரிகள்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவீத வெற்றி பெற இரவு, பகல் பாராமல் களப்பணி ஆற்றுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், இந்திய அரசின் ஆட்சி மொழியாகவும் தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in