

ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27 (இன்று) அனுசரிக்கப்படுகிறது. அவர் மறைந்து ஓராண்டு நிறைவ டைந்தாலும், அவரின் நினைவுகள் நம் நெஞ்சைவிட்டு என்றைக்கும் மறையாது.
‘இன்றைய வகுப்பறைகளி லேயே நாளைய இந்தியா நிர்மா ணிக்கப்படுகிறது’ என்று கலாம் பலமுறை கூறியுள்ளார். எனவே, அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், குறிப் பாக உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில், அப்துல் கலாம் பெயரில் ‘அறிவியல் தொழில்
நுட்ப நூலகம்’ அமைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.