

பொங்கல் பண்டிகையை கொண்டா டுவதற்காக சென்னையில் வசிக் கும் பெரும்பாலோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் வசதிக் காக கோயம்பேட்டில் இருந்து சனிக்கிழமை 1,325 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 13-ம் தேதி (திங்கள்கிழமை) போகிப் பண்டிகை. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக 6 நாள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும் பெரும்பாலோர், பொங் கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சனிக்கிழமையே புறப்பட்டு விட்ட னர். இதன்காரணமாக பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்களின் வசதிக்காக சனிக்கிழமை மட்டும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1,325 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் புறப்படும் நேரம் குறித்து மைக் மூலம் அறிவிக்கப்பட்டது.
வீண் அலைச்சலை குறைக்கும் வகையில், டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்களுக்கு தனி நடைமேடைகள் ஒதுக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வழக்கத்தைவிட அதிகமான பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் இயக்கப்பட்டதால் நகரில் பல சாலைகளில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் பெருங்களத்தூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பொங்கல் பண்டிகை வரை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இதுகுறித்து பயணிகள் சந்திர சேகர், அய்யாதுரை, உதயா, சிவா ஆகியோர் கூறுகையில், ‘‘வட பழனியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வரவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. போக்குவரத்து நெரிசல்தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட மாவட்ட பஸ்களை புறநகர் பகுதியில் இருந்து பிரித்து இயக்கினால் சிறப்பாக இருக்கும்’’ என்றனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மக்க ளுக்கு போதுமான அளவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், போதிய அளவில் இடவசதியும், சாலை வசதியும் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. மதுரவாயலில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வரவே சுமார் 2 மணி நேரம் ஆகிவிடுகிறது. வண்டலூரில் அமைக்கப்பட உள்ள புறநகர் பஸ் நிலையத்தை விரைவில் கட்டினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்’’ என்றனர்.
ரயில்களிலும் நெரிசல்
பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் மக்களால் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. எழும் பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். மின்சார ரயில்களி லும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.