ஐம்பொன் சிலை கடத்தலில் மேலும் 4 பேர் கைது

ஐம்பொன் சிலை கடத்தலில் மேலும் 4 பேர் கைது
Updated on
1 min read

கடலூரில் பிடிபட்ட ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் விநாயகர் சிலை கடத்தலில் தொடர்புடைய தாக மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூரில் கடந்த மாதம் 23-ம் தேதி ரூ.4 கோடி மதிப்புள்ள 1,600 வருடம் பழமையான ஐம் பொன் விநாயகர் சிலையை காரில் கடத்தும்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமை யிலான போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த னர். அவர்களிடம் இருந்த ஐம் பொன் விநாயகர் சிலை, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கடலூர் புதுநகர் போலீஸார், கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் சிலை கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாமக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன், நாகராஜன், கார்த்திக், அல்லிமுத்து, சேலம் மாவட்டத் தைச் சேர்ந்த கார்த்திக்குமார் ஆகியேருக்கு சிலை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் அல்லிமுத்து கோவை மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் தனிப்படை போலீஸார், சீனிவாசன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து தீவிர விசா ரணை நடத்தியதில், கடத்தப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை நாமக் கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன், சித்தி விநாயகர் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பதும், இது தொடர்பாக கடந்த 16.7.14 அன்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது.

முக்கிய நபர்கள் யார்?

இதையடுத்து நேற்று முன் தினம் நள்ளிரவு சீனிவாசன் உள் ளிட்ட 4 பேரை கடலூர் புதுநகர் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீ ஸார், ஐம்பொன் விநாயகர் சிலை புதுச்சேரியில் இருந்து எந்த நாட்டுக்கு கடத்த திட்டமிடப் பட்டது? இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in