

‘தி இந்து’ குழுமம், சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து ‘கார்கள் இல்லாத ஞாயிறு விழா’வை சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கின.
சென்னை மாநகரப் பகுதியில், நாளுக்கு நாள் மக்கள் பெருக் கம் அதிகரித்து வருகிறது. குழந்தை களோடு குடும்பமாக விளையாடி மகிழ்வதற்கான பொது இடங் கள் சென்னையில் குறைந்து விட்டன.
இந்நிலையில் குடும்பத்தோடு விளையாடுவதற்கு சாலையில் வாகன போக்குவரத்தை நிறுத்தி, பொது இடம் ஒன்றை உருவாக்க ‘தி இந்து’ குழுமம் திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை யுடன் இணைந்து கடந்த 2015 அக் டோபரில், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா தொடங்கப்பட்டது. அதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அவ் விழா மெரினா கடற்கரை சாலை யிலும் நேற்று தொடங்கப்பட்டது.
அங்கு ஜூம்பா நடனம் மூலம் உடற்பயிற்சி, பலூனில் பொம்மை செய்யும் பயிற்சி, முதலுதவி பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டது. கேரம், செஸ், கயிறு இழுக்கும் விளையாட்டு போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ‘தி இந்து’ குழும இதழ்கள், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை படிப்பதற்கான கூடமும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. மெரினா கடற்கரையில் உடற்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்ததுடன், நாளிதழ்களையும் படித்தனர். ‘தி இந்து’ குழும இதழ் களில் 1940-ம் ஆண்டு முதல் தற் போது வரை வெளியான கேலி சித்திரங்கள் கண் காட்சியும் நடைபெற்றது. இதை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து சென்றனர்.
இது தொடர்பாக திருவல்லிக் கேணியைச் சேர்ந்த வி.சத்ய நாராயணன் கூறும்போது, “இன்று காலை மெரினாவில் கார்கள் இல்லாத ஞாயிறு விழாவை பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதுநாள் வரை நடைப்பயிற்சிக்கு மட்டுமே உகந்த இடமாக இருந்த மெரினாவில், விளையாட்டு கருவிகளை வழங்கி, குடும்பத்தோடு விளை யாட வாய்ப்பளித்து, பல்வேறு பயிற்சிகளை அளிப்பது வரவேற் கத்தக்கது. மேலும் படிக்கும் ஆர் வத்தை தூண்டும் வகையில் நாளிதழ்களுடன் கூடிய கூடம் அமைத்திருப்பது பாராட்டுக் குரியது. கேலி சித்திரங்கள் கண்காட்சி வரலாற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ‘தி இந்து’ குழுமத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விழாவில் பங்கேற்ற மயிலாப் பூர் சரக துணை காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறிய தாவது:
நடைப்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், எந்த விதமான இடையூறும் இன்றி, மகிழ்ச்சியாக இருப்பதற்காக இங்கு கார்கள் இல்லாத ஞாயிறு விழா தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ‘தி இந்து’ குழுமம், சென்னை மாநகரக் காவல், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் செய் துள்ளனர். மெரினா சர்வீஸ் சாலையில் காந்தி சிலை முதல் நேதாஜி சிலை வரை சுமார் 2 கிமீ நீள சாலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. படிப்படியாக முழு நீளத்துக்கும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் இங்கு செய்தித்தாள் வாசிப்பதை யும், அவர்களின் குழந்தைகள் விளையாடுவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு நல்ல தொடக்கம். அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட்டு, பொதுமக்களின் மகிழ்ச்சி உறுதி செய்யப்படும் என்றார்.