Published : 19 Jun 2016 08:26 AM
Last Updated : 19 Jun 2016 08:26 AM

உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை: அதிமுகவினருக்கு ஜெயலலிதா எச்சரிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக முழு வெற்றி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத் துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளோம். இதன் மூலம் மக்கள் நம் பக்கம் இருந் திருக்கிறார்கள் என்பது தெளி வாகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. வலுவான பலமுனைப் போட்டியும் இருந்தது. இந்தச் சூழலில் நாம் 200-க்கும் அதிகமான தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், 134 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம்.

இதற்கு நம் கட்சியினர் தேர்தலில் வேலை செய்யாததும், உள்ளடி வேலைகளைச் செய்த தும் பணத்தை முறையாக செலவிடாததுமே காரணம் என ஆதாரங்களுடன் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அமைச் சர்கள், எம்எல்ஏக்களாக இருந்த வர்கள் மீண்டும் தங்களுக்கே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அப்படி கிடைக்காவிட்டால் தேர்தல் வேலை செய்யாமல் ஒதுங்கி விடுகின்றனர். சிலர் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கவும் வேலை செய்கின்றனர். இது கட்சிக்கு செய்யும் துரோகமாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஒருவருக்கே மீண்டும் மீண் டும் வாய்ப்பு கொடுத்தால் புதிய வர்கள் எப்படி பதவிக்கு வர முடியும்? கட்சி எப்படி வளரும்? இந்த முறை வாய்ப்பு இல்லை என்றால் அடுத்த முறையோ அல்லது வேறு ஏதாவது வாய்ப்போ கிடைக்கும். அதுவரை காத்திருக்காமல் கட்சிக்கு துரோ கம் செய்தால், இனி அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியி ருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக முழு வெற்றி பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட, ஒன்றிய கவுன்சில்களில் எதிர்க்கட்சி என் பதே இருக்கக் கூடாது. அப்படி எங்காவது அதிமுக தோற்றால் அங்குள்ள பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, எல்லாவற்றையும் மறந்து முழு வெற்றி என்ற லட்சியத்துடன் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக தேர் தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசிய தாக கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசும் போது, மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் சிலரை எழுப்பி, உங்கள் தொகுதியில் வெற்றியா, தோல்வியா? என கேட்டுள்ளார். தோல்வி என பதிலளித்தவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு அவர்களை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x