

இலங்கை நீதிமன்றத்தினால் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மேல்முறையீடு மனு செய்யப்படவுள்ளது.
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு, தமிழக அரசு இதற்கான சட்டச் செலவுகளுக்காக ரூ.20 லட்சம் தொகைக்கான காசோலையை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மேல்முறையீட்டை அறிவுறுத்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ், மீன் வளர்ப்பு, பால் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை செயலர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடத்தில் இந்த வழக்கு நிலவரங்களை தெரிவித்தனர்.
மீனவர்கள் சார்பாக ஆஜராக திறமையான வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது