

நாகை மாவட்டம் பாமக துணைப் பொதுச்செயலாளர் க. அகோரம் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையையும், கட்டுப்பாட்டையும் மீறி செயல்பட்டதாலும், கட்சியின் பெயருக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் நாகை மாவட்டத்திற்கு பொறுப்பான பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் க. அகோரம் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அகோரத்துடன் கட்சி நிர்வாகிகள் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.