ஜெர்மன் பெண்ணுக்கு வன்கொடுமை: செல்போன் சிக்னலை வைத்து 2 பேரிடம் போலீஸ் விசாரணை

ஜெர்மன் பெண்ணுக்கு வன்கொடுமை: செல்போன் சிக்னலை வைத்து 2 பேரிடம் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண், கடந்த 2-ம் தேதி சூளேரிக்காடு கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தபோது, மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். போலீஸார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் கூறிய அடை யாளங்களை வைத்து குற்றவாளி யின் மாதிரிப் புகைப்படத்தை வெளியிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாதிரிப் புகைப் படத்தில் உள்ள அடையாளங்கள் மற்றும் சம்பவ நேரத்தில் கடற் கரைப் பகுதியில் இருந்த செல்போன் சிக்னலை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். சந் தேகிக்கத்தக்க வகையில் அப் பகுதியில் செல்போன் சிக்னல் பெற்ற 2 நபர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருவதாகக் கூறப்படு கிறது. இதனால், விரைவில் குற்ற வாளிகள் பிடிபடுவர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித் தன. இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷிடம் கேட்டபோது, ‘சந்தேகத்தின் பேரில் பல்வேறு நபர்களி டம் விசாரணை நடை பெற்று வருகிறது. சம்பவத்தில் தொடர் புடைய நபர்களைப் பிடிக்க போலீ ஸார் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in