

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்கரையையொட்டி உருவாகி யுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு பாதிப் பில்லை.
இருப்பினும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நடுவட்டம், வால் பாறையில் தலா 20 மி.மீ., காஞ்சிபுரம், நாமக்கல், போளூரில் தலா 10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.