

சட்டப்பேரவை வளாகத்தில், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான சிற்றுண்டி மையம் உள்ளது. இதில், கூட்டுறவு உணவகம் சார்பில் டீ, காபி, சுண்டல் வழங்கப்படுகிறது. மானிய கோரிக்கைகளின் போது துறைகள் தோறும் வழங்கப்படும் மதிய உணவும் பேரவை உறுப்பினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது.
நேற்று சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அரிசி கொழுக்கட்டை, கொள்ளு மற்றும் நெல்லிக்காய், வில்வ இலை ஜூஸ் வழங்கப்பட்டது. அதன்பின் சித்த மருத்துவத்துறை சார்பில் தூதுவிளை சூப் வழங்கப்பட்டது. இதில் நெல்லி மற்றும் வில்வ ஜூஸ் குளிர்ச்சியாகவும் வழங்கப்பட்டதால், பலரும் கேன்களில் வாங்கிச் சென்று அருந்தினர்.