

கோயம்பேடு அடுத்த நெற் குன்றத்தில் பி.காம் படித்துவிட்டு கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
கோயம்பேடு அடுத்த நெற் குன்றம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் துரை வெங்கடேசன் (57). இவர் அப்பகுதியில் உள்ள மேட்டுக் குப்பத்தில் 27 ஆண்டுகளாக மெடிக் கல் ஷாப் வைத்துள்ளார். அதன் அருகிலேயே கடந்த ஓர் ஆண்டாக கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் இவர் டாக்டருக்கு படிக்காமல் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக, போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையிலான போலீஸார், கிளினிக் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை யில், அவர் பி.காம் மட்டுமே படித்து இருப்பதும், எம்பிபிஎஸ் படிக்கவில்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலி டாக்டர் துரை வெங்கடேசனை போலீ ஸார் கைது செய்து காவல் நிலை யத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியில் அவர் நெஞ்சு வலிப்பதாக தெரி விக்கவே, அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக போலீஸார் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பார்வையில் படும்படி சான்றிதழ்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவருமான கே.செந்தில் கூறியதாவது:
சொந்தமாக கிளினிக் தொடங்கு பவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தன்னுடைய பெயர், படிப்பு மற்றும் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். நோயாளிகளின் பார்வையில் படும்படி, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வழங்கிய பதிவு எண் சான்றிதழை வைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் மருந்து சீட்டை எழுதிக் கொடுத்து கையெழுத்துப் போடுவார்கள். அதன்கீழே தன்னுடைய பெயர், படிப்பு மற்றும் பதிவு எண்ணுடன் கூடிய சீல் வைக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான டாக்டர்கள் கடைப்பிடிப்பதில்லை. அதனாலேயே போலி டாக்டர்கள் பெருகி வருகிறார்கள். டாக்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான், போலி டாக்டர்களை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.