

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பான செய்திப் பதிவுகள்.
நிகழ்நேரப் பதிவு நிறைவுற்றது.
5.30 pm: முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றதால், கைது செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசன் தற்போது விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறுகையில், ''அரசியல் நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகளி இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்சினைக்காகவே ஒன்றுகூடினர். ஆனால், போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி'' என்று கூறியுள்ளார்.
5.15 pm: முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற எல்லா வகைகளிலும் துணை நின்ற பொதுமக்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
4.30 pm: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அதன் முழு விவரம்: >தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் வெற்றி: ஜி.ராமகிருஷ்ணன்
3.10 pm: விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் நடைபெற்ற போராட்டம் காரணமாக வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் காட்டேரிகுப்பம் கிராமத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு, கரும்பு விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் 4 முனை சந்திப்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்களது முகமுடியை அணிந்து தூக்கு போடும் போராட்டத்தை நடத்தினார்கள்.
2.30 pm: எதிர்க்கட்சியினர் விளம்பரத்திற்காகவே முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். வறட்சியைப் போக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
2.00 pm: தமிழக அரசு மற்றும் பாஜகவின் அச்சுறுத்தலையும், மிரட்டலையும் நிராகரித்து முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய கட்சிகள், அமைப்புகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: >முழு அடைப்பு போராட்டம் மகத்தான முறையில் வெற்றி: முத்தரசன்
12.45 pm: புதுச்சேரி – சென்னை சாலையில் வெங்கடசுப்பையா சிலை அருகே அரசுப் பேருந்து மீது சில மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
(புதுச்சேரியில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். | படம்: சாம்ராஜ் )
12.33 pm: முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் 4 லட்சம் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை.
12.30 pm: சேலம் அம்மாபேட்டையில் விவசாயிகள் கண்ணை கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12.25 pm: முழு அடைப்பு போராட்டத்தில் லாரி உரிமையாளர்களும் ஈடுபட்டுள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
12.05 pm: மக்கள் நடமாட்டமின்றி தி.நகர் ரங்கநாதன் தெரு வெறிச்சோடி காணப்பட்டது.
11.55 am: வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே மறியலில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
11.50 am: எதிர்க்கட்சியின் முழு அடைப்புப் போராட்டத்தால் எந்த பயனும் இல்லை: அமைச்சர் மணிகண்டன்
11.30 am: தமிழக அரசின் மீது பழி சுமத்தவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ
11.10 am: எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மே 25-ம் தேதி முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்: அய்யாகண்ணு. விரிவான செய்திக்கு: >டெல்லியில் தமிழக விவசாயிகள் மிரட்டப்பட்டனர்: அய்யாகண்ணு குற்றச்சாட்டு
11.00 am: தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது: மு.க. ஸ்டாலின். விரிவான செய்திக்கு >அடுத்தகட்டப் போராட்டம் தீவிரமாக இருக்கும்: ஸ்டாலின்
10.55 am: சென்னை சைதாப்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்களும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
10.45 am: சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை உள்ளிட்ட கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ளன. அதன் முழு விவரம்: >சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
10.30 am: சென்னை எழும்பூரில் திமுகவினர் நடத்தும் போராட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்பு.
10.25 am: சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்கெட் சாலையிலிருந்து பேரணியாக நடந்து வந்த எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் முழு விவரம்: >சென்னையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் மறியலும்
(சைதை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். | படம்: ம.பிரபு )
10.15 am: சென்னை எழும்பூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில், திராவிட கழக தலைவர் வீரமணி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக, இடதுசாரி கட்சி தலவைர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10.00 am: திருவாரூர் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது. டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முந்தைய செய்திப் பதிவுகள்:
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: >முழு அடைப்பு என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி: எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்
முழு அடைப்புப் போராட்டத் தால் தமிழகத்தில் பால் விநியோகம் தடைபடாது என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விரிவான செய்திக்கு: >முழு அடைப்பு போராட்டத்தால் பால் விநியோகம் தடைபடாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி
யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி வழியில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு அறப்போராட்டத்தை நடத்திட ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு: >எந்தத் தூண்டுதலுக்கும் இடங்கொடாமல் அமைதி வழியில் போராட்டம்: ஸ்டாலின் வேண்டுகோள்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள தால் கடைகள் அடைக்கப்படும் என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்: >விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம்: கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடாது என அறிவிப்பு
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிற்சங்கத்தினர், திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரம்: >முழு அடைப்புப் போராட்டம்: ஆதரவு யார்? புறக்கணிப்பு யார்?
கடைகள், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைக்கச் சொல்பவர் கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் முழு விவரம்: >இன்று முழு அடைப்பு போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் கைது - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை
தமிழக விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள் ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங் களும், லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள் ளன. இதனால், தமிழகம் முழுவதும் இன்று அரசு பேருந்துகள் இயக்கப் படுமா? என பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. அதன் முழு விவரம்: >முழு அடைப்பு போராட்ட அறிவிப்பு எதிரொலி: அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்