Published : 06 Feb 2017 10:09 AM
Last Updated : 06 Feb 2017 10:09 AM

‘தி இந்து’-எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ விழா: மாணவர்களின் உயர் கல்விக்கு அடித்தளம் பிளஸ் 2 தேர்வு- திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை

‘உயர் கல்விக்கு அடித்தளமாக பிளஸ் 2 தேர்வு அமைந்துள்ளது’ என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராஜேந்திரன் ‘தி இந்து’ நாளிதழ், எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியுடன் இணைந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாண வர்களுக்காக நடத்தப்பட்ட ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசும்போது கூறினார்.

‘தி இந்து’ நாளிதழ், எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி யுடன் இணைந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை திருவள்ளூரில் நேற்று நடத்தியது. ஸ்ரீ மூங்கிலான் உடை யார் திருமண மஹாலில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.ஆர்.பொறியியல் கல் லூரியின் தலைவர் ராமதாஸ் மற்றும் இயக்குநர் சுகந்தி ஆகி யோர் தலைமை தாங்கினர். திருவள்ளூர் மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் வி.முத்துசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் த.இராஜேந்திரன், கல்வியா ளர் மற்றும் தன்னம்பிக்கை பேச் சாளர் சீமான் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கலால் துறை உதவி ஆணையர் வி.முத்துசாமி பேசும்போது, “கல்வி அறிவு இல் லாத பெற்றோருக்கு பிறந்த குழந்தையும், ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தையும் வசதியான குடும்பத்தில் பிறந்த குழந்தை களுடன் போட்டி போடும் நிகழ்வாக தேர்வு அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மாணவர்கள் தங்கள் மனதுக்கு எது இஷ்டமாக தோன்று கிறதோ அதை செய்ய வேண்டும்” என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராஜேந்திரன் பேசும் போது, “மார்ச் 8-ம் தேதி நடக்க உள்ள பொதுத் தேர்வை எதிர் கொள்ள தயாராகி வரும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஏற்கெனவே 10-ம் வகுப்பு தேர்வை சந்தித்து இருப்பீர்கள். அந்தத் தேர்வைவிட பிளஸ் 2 தேர்வு சற்று மாறுபட்டது. மேல்நிலைக் கல் விக்கு அடித்தளமாக விளங்குவது பிளஸ் 2 தேர்வு. இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சொல்லப்படும் கருத் துகளை நல்ல முறையில் கூர்ந்து கவனித்து, அதன்படி தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.

தன்னம்பிக்கை பேச்சாளர் சீமான் பேசும்போது, “ஒரு மதிப் பெண் வினாக்களுக்கு தவறில்லா மல் பதில் அளித்தாலே அவர்கள் பிற கேள்வியில் சிறிய தவறுகள் செய்திருந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்கும். நமது மூளை எந்தவொரு விஷயத் தையும் 11 விநாடிதான் கவனிக்கும். ஆனால், 20 விநாடி தொடர்ந்து கவனித்தால் நமது மனதில் ஆழமாக பதியும். படிக்கும்போது நாம் மனதை ஒருமுகப்படுத்தினால் 200-க்கு 200 மதிப்பெண் நிச்சயம்.

தேர்வு முடியும் வரை வீட்டில் டிவி பார்ப்பது, செல்போனை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தியாகம் செய்ய வேண்டும். படிக்கும்போது வீட்டின் மூலையில் அமர்ந்து படிக்க வேண்டும். இரண்டு பக்கமும் சுவர் இருக்கும்போது நமது மனது ஒருமுகப்படும். நாம் தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பும், தூங்கி எழுந்த பின் 2 மணி நேரமும் நமது மூளை மிகவும் கூர்மையாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் படித்தால் பாடம் நம் மனதில் பதியும்” என்றார்.

பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாட நுணுக் கங்கள் மற்றும் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்வது தொடர் பாக உயிரியல் பேராசிரியர் என்.குமாரவேல், இயற்பியல் பேராசியர் ஏ.திருமாறன், வேதியியல் பேராசிரி யர் பரீத் அஸ்லாம், கணிதவியல் பேராசிரியர் ஆர்.மணிமாறன் ஆகி யோர் ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1,194 மதிப்பெண் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி பவித்ரா, 1,163 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்த சங்கீதா, 1,062 மதிப்பெண் பெற்று நகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற மாரி யம்மாள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர் கொள்வது குறித்து மாணவர் களுக்கு ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.திருவரசு, பள்ளி கள் துணை ஆய்வாளர் ராம மூர்த்தி, ‘தி இந்து’ நாளிதழின் சர்க்குலேஷன் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார், எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி யின் செயலாளர் எஸ்.சுரேஷ்பாபு, மின்னியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.சங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் முனைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஃபார்முலா புத்தகம், முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியுடன் கேட், ‘சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன்’ நிறுவனம் மற்றும் ‘ஆஸ்பயர்’ போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கின. நிகழ்ச்சியை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியைகள் பூரணி மற்றும் அர்ச்சனா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x