எழுத்தாளர் வே.சபாநாயகம் மறைவு

எழுத்தாளர் வே.சபாநாயகம் மறைவு
Updated on
1 min read

விருத்தாசலத்தைச் சேர்ந்தவரும் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆர்வல ரும், பேராசிரியரும், எழுத்தாள ருமான வே.சபாநாயகம்(81) மார டைப்பால் நேற்று காலை கால மானார்.

கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தை அடுத்த தெ.வ.புத்தூர் கிராமத்தில் 1935-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி பிறந்தார் வே.சபாநாயகம். விருத்தாசலம் பெரியார் நகரில் வசித்து வந்தார். எழுத்தாளர் ஜெய காந்தனோடு நெருங்கிய தொடர்பு டையவர்.

இவர், கடந்த 60 ஆண்டுகளாக எழுத்துப் பணியில் தன்னை ஈடுப டுத்திக் கொண்டு 33 நூல்களை எழுதியுள்ளார். அரை நூற்றாண்டு காலம் தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கியவர்.

வே.சபாநாயகம் அண்மையில் எழுதி வெளியிட்ட, 'புற்றில் உரையும் பாம்பு', 'தடம் பதித்த சிற்றிதழ்கள்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. 'கணையாழி களஞ்சியம்' மற்றும் 'ஞானரதத்தில் ஜெயகாந்தன்' என்ற தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

நாளை (6-ம் தேதி) காலை 8 மணிக்கு விருத்தாசலம் மணிமுத் தாறு கரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in