Published : 25 Nov 2014 10:33 AM
Last Updated : 25 Nov 2014 10:33 AM

சென்னையில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன: போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

சென்னையில் கொலைக் குற்றங் கள் குறைந்துள்ளன என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறிய தாவது:

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 9 கொலைகள் நடந் துள்ளன. இவற்றில் 8 கொலைகள் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நடந்துள்ளன. குடும்பத்துக்குள் திடீரென்று நடக்கும் கொலைக் குற்றங்களை நம்மால் எப்படி தடுக்க முடியும்? கொலை நடந்த பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

ரவுடிகள், கூலிப்படையினர் நடத்தும் கொலைகளை வெகு வாக குறைத்திருக்கிறோம். சென்னையில் 2012-ம் ஆண்டில் 144 கொலைகளும், 2013-ல் 169 கொலைகளும், 2014-ல் 132 கொலைகளும் நடந்துள்ளன. இதேபோல மற்ற குற்றங்களும் சென்னையில் குறைந்துள்ளன. சென்னையில் முதியவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தனியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. குற்றங்களை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

கூடுதல் ஆணையர் கருணா சாகர் கூறும்போது, "வேப்பேரியில் மனைவி மஞ்சுவை கொன்ற கணவர் ஹேமந்த்ராஜை போலீஸார் சில மணி நேரங் களிலேயே கண்டுபிடித்துவிட்டனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கொள்ளை யடிக்கப்பட்டதாக கூறி மறைத்து வைத்திருந்த நகைகள், அவர் பயன்படுத்திய ஸ்கூட்டர் போன்ற வற்றை பறிமுதல் செய்திருக் கிறோம். ஹேமந்த்ராஜின் வீட் டருகே ஒரு பள்ளிக்கூடம் மற்றும் கோயிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஹேமந்த்ராஜின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளையும் சாட்சிக்காக சேர்த்திருக்கிறோம்.

கொளத்தூரில் ஹேமாவதி என்ற பெண் கடந்த 20-ம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு, அவர் அணிந்திருந்த 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமாவதி மறுநாள் பரிதாபமாக உயிரிழந்தார். ஹேமாவதி கணவரின் மகன் ராஜேந்திரன் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம்" என்றார்.

‘மனசுவிட்டுப் பேசினாலே போதும்’: மனநல மருத்துவர் ஆலோசனை

வேப்பேரியில் மஞ்சு (48) என்ற பெண்ணை அவரது கணவர் ஹேமந்த்ராஜ் ஜெயின் (50) கொலை செய்துள்ளார். போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் ஹேமந்த்ராஜ் கூறியிருப்பதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சு வின் நடவடிக்கையில் அதிக மாற் றங்கள். என்னை மதிக்கமாட்டாள். பிள்ளைகளின் பேச்சையும் கேட்கமாட்டாள். என்ன சொன் னாலும் எதிர்த்துப் பேசுவாள். என்னிடம் கோபப்பட்டு கத்திக் கொண்டே இருப்பாள். பிள்ளை கள் முன்பு வைத்து அவமானப் படுத்துவாள். பலமுறை பொறுத் துப் போய்விடுவேன்.

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாருடன் கொல்கத்தா சென்று திருமணத்துக்கான ஆடைகள், பொருட்கள் வாங்க முடிவு செய்திருந்தேன். ரயில் டிக்கெட்கூட எடுத்துவிட்டோம். நான் கொல்கத்தா போகக்கூடாது என்பதில் மஞ்சு பிடிவாதமாக இருந்தாள். கடந்த 21-ம் தேதியும் இதுதொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத் தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மஞ்சுவின் கழுத்தை அறுத்து கொன்றேன். இவ்வாறு ஹேமந்த்ராஜ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கேட்டபோது மனநல மருத்துவர் தேவராஜ் கூறியதாவது:

45 வயதைக் கடக்கும் பெண் களுக்கு ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சில நேரங்களில் அவர்களது நடவடிக்கைகளிலும் மாற்றத்தை உருவாக்குகிறது. குடும்ப உறுப்பினர்கள் அன்பாக பழகும்போது பெண்களுக்கு இதன் பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் மஞ்சுவின் குடும்பத்தில் வேறு பிரச்சினைகள் இருந்திருக்கலாம். 45 வயதைக் கடந்த மஞ்சுவுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தால் நடவடிக்கைகளில் மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். இதை தடுக்க மருந்து எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு புரியும் வகையில் மனம்விட்டுப் பேசினாலே போதும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x