

பாலாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண் டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை: தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் பாலாறு விவகாரம் குறித்து விவசாயிகள், அப்பகுதி மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர அரசு, புல்லூர் என்ற இடத்தில் ஏற் கெனவே 5 அடி உயரத்தில் கட்டப் பட்டிருந்த தடுப்பணையை மேலும் 10 அடியாக உயர்த்த பணி களை மேற்கொண்டு வருகிறது.
அணை கட்டப்பட்டுள்ள இடத் தின் இடது கரையில் தமிழக மக்கள் வசித்து வருகின்றனர். வலது கரையில் உள்ள கனக துர்க்கையம்மன் கோயிலை, கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக எல்லையில் உள்ள அப் பகுதி கிராம மக்கள் கட்டியதுடன் கடந்த 2014 வரை கோயிலுக்கான அனைத்து பணிகளையும் அவர் களே நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர - தமிழக எல்லையில் உள்ள இந்த கோயிலை மையப்படுத்தி அணை கட்டுமானத்தை செய்து வருகி றது ஆந்திர அரசு. அணை வழி யாகவே கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளும் கட்டப்பட்டு வரு கின்றன. கோயிலை அபகரிக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக தமிழக பக்தர்களை தனது காவல் துறை மூலம் தடுத்து வருகிறது ஆந்திர அரசு. நிலைமை இப் படியே தொடர்ந்தால், இரு மாநில உறவும் சீர்குலையும் அபாயம் நிலை உள்ளது’’ என்றார்