Published : 06 Jun 2017 08:17 AM
Last Updated : 06 Jun 2017 08:17 AM

இந்தியாவின் பன்முகத் தன்மையை காக்க திமுக என்றென்றும் உறுதியுடன் போராடும்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எதேச்சதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காக்க திமுக என் றென்றும் உறுதியுடன் போராடும் என அக்கட்சியின் செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

கடந்த 3-ம் தேதி திமுக தலை வர் கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா எதிர்பார்த்ததைவிட வெற்றி கரமாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதியால் பங்கேற்க முடியவில்லையே என்ற மனபாரம் இருந்தாலும், என்றும் நமக்கு வழிகாட்டுபவர் என்கிற உணர்வுடன் விழாவில் நான் பங்கேற்றேன். விழாவில் பங்கேற்ற தலைவர்கள் அனை வரும், இந்தியாவுக்கே கருணா நிதி எப்படி வழிகாட்டியாக விளங்குகிறார் என்பதை எடுத் துக் காட்டினர்.

காங்கிரஸ் துணைத் தலை வர் ராகுல் காந்தி விழாவில் பங்கேற்றதுடன் கருணாநிதியை நேரில் சந்தித்து அன்பைப் பொழிந்தார். எனது இல்லத் துக்கும் வந்து சிறப்பு செய்தார். அதேபோல விழாவில் பங்கேற்ற பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங் களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் என தேசிய அரசியலில் மையம் கொண்டுள்ள நேச சக்திகளின் கூட்டுறவாக வைர விழா அமைந்தது.

கருணாநிதியின் அரசியல், பொதுவாழ்வு சாதனைகளை அவரவர் அறிந்த மொழிகளில் எடுத்துச் சொன்ன விதமும் அவற்றுக்கு மைதானத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் எழுப்பிய ஆரவாரமும் மெய் சிலிர்க்க வைத்தது. விழாவில் பங்கேற்ற பலரும் கருணா நிதியை நேரில் சந்தித்து வாழ்த் தினர். இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள், முகநூல், ட்விட்டர், இணையதளம் போன்ற சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன் றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

வைர விழாவில் பங்கேற்ற தேசிய தலைவர்களை சந்தித்து அவர்களது வருகையை உறுதி செய்த மாநிலங்களவை உறுப் பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, மத்திய முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள் ளிட்டோருக்கு நன்றியை உரித் தாக்குகிறேன். விழா ஏற்பாடு களை மிகச் சிறப்பாக செய் திருந்த சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன் பழகன் உள்ளிட்ட நிர்வாகி களுக்கும் நன்றி. அரசியல் வேறு பாடுகளைக் கடந்து கருணா நிதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.

இந்தியா எப்போதெல்லாம் சவால்களை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங் களையும் பாதுகாக்கும் நோக்கத் துடன் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி, பேரலையில் தத்தளிக்கும் படகை மீட்கும் துடுப்பாக செயல்பட்டு வரு பவர் கருணாநிதி. தற்போது நாடு சந்தித்து வரும் சோதனைகளில் இருந்து மீள, அவரது வழிகாட்டு தல்களும், ஆலோசனையும் அவ சியம் என்பதால்தான் கருணா நிதியின் பிறந்த நாளை மதசார்பின்மை - சமூக நீதிக் கொள்கையின் அகில இந்திய விழாவாகக் கொண்டாடி னோம்.

இந்த விழாவில் பேசிய தலை வர்கள் தற்போதுள்ள சூழ்நிலை யில் எனக்குள்ள பொறுப்பைச் சுட்டிக்காட்டி என் மீது நம் பிக்கை தெரிவித்திருப்பதை அக்கறையுடன் உணர்கிறேன். இந்தியாவின் சிறப்பு அம்சமான பன்முகத் தன்மையைப் பாது காக்கவும், எதேச்சதிகாரம் தலை தூக்காமல் தடுக்கவும், மாநில உரிமைகளைப் பறித்து கூட்டாட் சித் தத்துவத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் சக்திகளை எதிர்க் கவும் கருணாநிதியின் வழிகாட்டு தலுடன் திமுக உறுதியுடன் போராடும். என் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்திய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. தளர்ச்சி கண்டு அடிமைப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கவும், எதேச்சதி கார சக்திகளிடம் இருந்து இந்தியாவின் பன்முகத் தன் மையை காக்கவும் திமுக பயணம் உறுதியுடன் தொடரும்.

இவ்வாறு கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x