Last Updated : 03 Apr, 2017 09:14 AM

 

Published : 03 Apr 2017 09:14 AM
Last Updated : 03 Apr 2017 09:14 AM

புதுச்சேரி ஆணையர் விவகாரத்தில் யார் உத்தரவு நடைமுறைக்கு வரும்?- கிரண்பேடிக்கு எதிராக ஒன்றிணைந்த அதிமுக, திமுக, காங்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளு நர் கிரண்பேடிக்கு எதிராக காங்கி ரஸ், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்துள்ளனர். நகராட்சி ஆணையர் விவகாரத்தில் யார் உத்தரவு நடைமுறைக்கு வரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநருக்கு நிதி, நிர்வாகம் ஆகியவற்றில் கூடுதல் அதிகாரம் உள்ளது. அதிகாரிகளை மாற்று வது தொடங்கி பல விஷயங் களில் ஆளுநரின் ஒப்புதல் தேவைப் படுகிறது. கடந்த காலங்களில் புதுச்சேரியில் ஆட்சியாளர்களுக் கும், ஆளுநருக்கும் இடையே மோதல் இருந்தாலும் அது பனிப் போராகத்தான் இருந்தது. தற் போது இந்த மோதல் வலுத்து வருகிறது. ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏ அழைக்கப்படாதது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தனக்கு வந்த புகார் மனு அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி கருத்து கேட்குமாறு நகராட்சி ஆணையர் சந்திரசேகருக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். அக்கூட்டத் துக்கு தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் (அதிமுக) அழைக்கப்படவில்லை. இதையடுத்து எம்எல்ஏவின் ஆதர வாளர்கள் நகராட்சி ஆணைய ருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாஸ்கர் எம்எல்ஏ, சட்டப்பேரவையில் நகராட்சி ஆணையர் மீது உரிமை மீறல் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், நகராட்சி ஆணை யர் சந்திரசேகர் தனக்கு மிரட்டல் வருவதாக போலீஸில் புகார் அளித் தார். இதனால் ஆளுநருக்கும், நகராட்சி ஆணையருக்கும் எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி னர். அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டி யலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். அந்த இடத்தில் கலை பண்பாட் டுத் துறை இயக்குநர் கணேசன் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.

அதில் கோபமடைந்த ஆளுநர் கிரண்பேடி, நகராட்சி ஆணையர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவுக்கு டெல்லியில் இருந்து உத்தரவிட்டார். அதை செயல்படுத்தாததால், தலைமைச் செயலரை விமர்சித்தார். அதற்கு தலைமைச் செயலர், “முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆணைப்படி நகராட்சி ஆணையரை காத்தி ருப்போர் பட்டியலில் வைக்க நான்தான் உத்தரவிட்டேன்” என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

தற்போது புதுச்சேரி திரும்பிய ஆளுநர், நகராட்சி ஆணையரை அழைத்து தனது ஆதரவை வெளிப் படையாகத் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (இன்று) முதல் நகராட்சி ஆணையராக பணியைத் தொடருங்கள் என்றும் தெரிவித் துள்ளார்.

இதற்கிடையில் காங்கி ரஸ், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் வெளிப்படையாகவே ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

நேற்று வரை விடுமுறை நாட்களாக இருந்தது. இன்று நகராட்சி ஆணையராக அமரப்போவது கணேசனா, சந்திரசேகரனா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது. சபாநாயகர் ஆணைப்படி முதல்வர் உத்தரவுப்படி செயல்பட்ட தலைமைச் செயலர் ஆணை செல்லுமா? அல்லது அந்த உத்தரவை ரத்து செய்த ஆளுநரின் உத்தரவு நடைமுறைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x