

பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 1,700 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கலந்தாய்வுக்கு 2,352 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. 203 பேர் கலந்தாய்வில் பங்கேற்றாலும் கல்லூரி எதையும் தேர்வு செய்யவில்லை.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்துள்ளார்.