முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு: சூடுபிடிக்கிறது ஆர்.கே.நகர் தேர்தல் களம்

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு: சூடுபிடிக்கிறது ஆர்.கே.நகர் தேர்தல் களம்
Updated on
2 min read

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலி யான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தேமுதிக வேட்பாளர் மதிவாணன் உட்பட இதுவரை 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் முடிய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறி வித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந் துள்ளது.

டிடிவி தினகரன் (அதிமுக), என். மருதுகணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (ஓபிஎஸ் அணி), ஜெ.தீபா (எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை), கங்கை அமரன் (பாஜக), மதிவாணன் (தேமுதிக), ஆர்.லோகநாதன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) என ஆர்.கே.நகரில் 7 முனை போட்டி உறுதியாகியுள்ளது.

வேட்பாளர்கள் ஆலோசனை

வேட்பாளராக அறிவிக்கப் பட்டதும் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் தொகு திக்குட்பட்ட புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள அருணாச்ச லேஸ்வரர் கோயிலில் வழிபட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கினார். வரும் 22-ம் தேதி அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. 23-ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஆர்.கே.நகர் பகுதியிலேயே வசிக்கும் திமுக வேட்பாளர் மருது கணேஷ், தினமும் கட்சி யினர், முக்கியப் பிரமுகர்கள், பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். புதுவண்ணாரப் பேட்டையில் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஓபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.மது சூதனன், ஆர்.கே.நகரிலேயே வசித்து வருகிறார். 1991-ல் இத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த வர்.

முன்னாள் அமைச்சர் என்ப தால் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். அவரும் தொகு தியில் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனைக் கூட் டங்களை நடத்தி வருகிறார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி யுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஆர்.கே.நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தண்டையார் பேட்டையில் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் தேர் தல் பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

பாஜக வேட்பாளர் கங்கை அமரன், கொருக்குப்பேட்டையில் நேற்று நடந்த கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஆர்.கே.நகரில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தேமுதிக வேட்பாளர் மதி வாணன், முதல் நாளிலேயே வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தொகுதியில் உள்ள கட்சி நிர் வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in