தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் விளக்கம்

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் விளக்கம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை சார்பில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா வேண் டாமா என்ற குழப்பம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

இந்த தடுப்பூசி பற்றி மத்திய சுகா தாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி உலக அளவில் 120 நாடுகளுக்கு மேல் போடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் ரூபெல்லா நோயால் பாதிக்கப்படுகின் றனர். போலியோவை போல் தட்டம்மை - ரூபெல்லா வையும் இந்தியாவில் இல்லா மல் செய்ய வேண்டும்.

அதனால் இந்த தடுப் பூசியை கண்டிப்பாக போட வேண்டும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in