

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அதி ருப்தி அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் கடந்த 6 மாதங்களாக கொத்தடிமையாக இருந்து வரும் ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 62 மீனவர்களை மீட்கக்கோரி திருமுருகன் என்பவர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஆள் கொணர்வு மனு தாக்கல்செய்தார்.
மீனவர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்தார். மாநில அரசு சார்பில் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு இதுவரை 3 கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரிக்கும் அமர் வின் நீதிபதிகள், இந்த விவகாரத் தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து அதி ருப்தி வெளியிட்டனர். பின்னர், தமிழக மீன்வளத் துறை அதி காரிகள் கூட்டம் நடத்தி, சவுதி அரேபியாவில் உள்ள மீனவர் களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வழக்கு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று மீன்வளத் துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும். மீனவர்களை மீட்பதில் எடுக்கப் பட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.