Published : 17 Jun 2016 08:46 PM
Last Updated : 17 Jun 2016 08:46 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால், சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைந்து ரூ.22 ஆயிரத்து 960க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், தங்கம் முதலீட்டில் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பில் சரிவு போன்ற காரணங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலையில் வெள்ளிக்கிழமை கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.392 குறைந்து ரூ.22 ஆயிரத்து 960க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 870க்கு விற்கப்பட்டது. இதுவே, வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 919க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x