

அடையாறில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட சசிகலா புஷ்பாவின் கண வர் வீடு திருநெல்வேலியில் உள் ளது. உட்கட்சி பிரச்சினையின் காரணமாக அவரது வீட்டை சிலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாக்கினர். அதைத் தொடர்ந்து டெல்லியில் சசிகலா புஷ்பா வசிக்கும் வீட்டுக்கு டெல்லி போலீஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து சென்னை அடையாறு இந்திரா நகர் முதலாவது குறுக்கு தெருவில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.