

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், போதைப் பொருள் தடுப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1,440 கோடி கடத்தல் பொருட்கள், 97 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை சட்டப்படி நடைபெறுகிறதா என் பதை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) கண்காணிக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்தி லும் டிஆர்ஐ அலுவலகம் செயல்படுகிறது. அலுவலகம் இல்லாத மாநிலங்களை, அருகில் உள்ள மாநிலத்தை சேர்ந்த டிஆர்ஐ அதிகாரிகள் கூடுதலாக கண்காணித்து வருகின்றனர்.
தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகின்றனர். சட்டவிரோதமாக விமானம், கப்பல் மற்றும் சாலை வழியாக கடத்தப்படும் தங்கம், போதைப் பொருட்கள், இயந்திரம், இயந்திர உதிரி பாகங் கள், வெளிநாட்டு பணம், மருந்துப் பொருட்கள், செம்மரம் உட்பட பல் வேறு பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கடத்தலில் ஈடுபடு பவர்கள் கைது செய்யப்படு கின்றனர்.
ரூ.254.70 கோடி தங்கம்
நாட்டில் கடந்த ஆண்டு நடந்த குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த 2015-ம் ஆண்டில் ரூ.254.70 கோடி தங்கம், ரூ.95 கோடி போதைப் பொருள், ரூ.10.99 கோடி மதிப்பி லான வெளிநாட்டுப் பணம், ரூ.787.15 கோடி இயந்திரங்கள், உதிரி பாகங் கள் மற்றும் செம்மரம் உட்பட மொத்தம் ரூ.1,439.83 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்களை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் ரூ.5,693.55 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு 89,307 கிலோ கஞ்சா, 1,521 கிலோ ஓபியம், 1,422 கிலோ ஹெராயின், 3,350 கிலோ ஹாஸிஸ், 62 கிலோ கொக்கைன் உட்பட மொத்தம் 96,808 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக 15,167 வழக்குகள் பதிவு செய்து, 203 வெளிநாட்டினர் உட்பட 32,069 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2014-ம் ஆண்டில் 1,15,500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 13,275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 292 வெளிநாட்டினர் உட்பட 27,455 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.